விருதுநகர், மார்ச் 1-
தமிழக அரசு சிறிய தொழிற் சாலைகள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளுக்கு 2 நாள் மின்சார விடுமுறை அறி வித்துள்ளது. இதன் மூலம் 1000 மெகாவாட் மின்hசரம் தமிழ்நாடு மின் வாரியத் திற்கு கிடைக்கும் அதை விவசாயத்திற்குத் தர வேண் டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் பெ.சண்முகம் கூறி னார். முன்னதாக விருதுநகரில் நடைபெற்ற பத்திரிகையா ளர் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:தமிழகத்தில் தற்போது மின்வெட்டால் விவசாயி கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். மும்முனை மின்சாரம் நாள் ஒன்றுக்கு வெறும் 3 மணி நேரம் மட் டுமே வழங்கப்படுகிறது. ஆனால் கவர்னர் உரையில் அரசின் துறைகளில் முதல் துறையாக விவசாயத்துறை என தமிழக அரசு அறிவித் துள்ளது. எனவே, தொழிற் சாலைகளுக்கு மின்சார விடுமுறை அறிவிப்பின் மூலம் மிச்சமாகும் மின்சாரத்தை விவசாயத்திற்குத் தர வேண் டும். அதேநேரத்தில் வெளி நாட்டு கம்பெனிகள் குறிப் பாக கார்ப்பரேட் கம்பெனி களுக்கு இந்த விடுமுறை கிடையாது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மத்திய அரசு, தமிழகத் திற்குத் தர வேண்டியது 2835 மெகாவாட் மின்சாரம் ஆகும். கூடுதலாக தர வேண்டு மென தமிழக முதல்வர் ஏற் கனவே வற்புறுத்தியுள்ளார். ஆனால் மத்திய அரசோ 1800 மெகாவாட் மட்டுமே தருகிறது. தற்போது தமிழக மக்கள் தவித்துக் கொண்டி ருக்கின்றனர். எனவே, ஆயி ரம் மெகாவாட் மின்சா ரத்தை தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தான் நெருக் கடியில் இருந்து மீள முடி யும். நெல் கொள்முதல் நிலையம் தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் மூலம் நெல் கொள் முதல் நிலையங்கள் திறக் கப்பட்டுள்ளன. ஆனால், நிதி குறைவாக ஒதுக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் 414 கொள்முதல் நிலையங் கள் உள்ளன. ஒரு நாளைக்கு ரூ. 4 முதல் 5 லட்சம் வரை பெறுமானமுள்ள நெல் வருகிறது. ஆனால் தினமும் ரூ.1 லட்சம் மட்டுமே தமி ழக அரசு ஒதுக்குவதால், நெல் மூட்டைகளை வைத்துக் கொண்டு விவசாயிகள் கொள் முதல் நிலையங்கள் முன்பு காத்துக் கிடக்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 320 கொள் முதல் நிலையங்கள் உள்ளன. அதேநேரத்தில் வியாபாரிகள் வெளி மாவட் டத்தில் இருந்து குறைவான விலைக்கு நெல்களை வாங்கி, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விற்கின்ற னர். இதைத் தடுக்க வேண் டும். விவசாயிகளுக்கு உடனே பணம் பட்டு வாடா செய்ய வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்கு சரணாலயம் தேனி, மதுரை, விருது நகர் ஆகிய மாவட்டங்களை இணைத்து வன விலங்கு சரணாலயம் அமைக்க அரசு அறிவித்துள்ளது. அதுவும் 25 ஆயிரம் ஹெக்டேர் ஏக் கர் நிலத்தில் அமைய உள் ளது. மேகமலை, வருசநாடு, வத்ராப், எழுமலை ஆகிய பகுதிகளில் இது அடங்கும். ஏற்கனவே, வன விலங்கு களால் இராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய பகுதி களில் விவசாய விளை பொருட் கள் பல லட்சம் மதிப்பில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக சரணா லயம் அமைக்க வேண்டிய தில்லை. ஏற்கனவே, இருக் கின்ற சரணாலயத்தை பாது காக்க வேண்டும். தேசிய நீர்க் கொள்கை மத்திய நீர் வள அமைச் சகம் தற்போது தேசிய நீர்க் கொள்கையை அறிவித்துள் ளது. இதை நாளிதழ்களில் ஹிந்தி, தமிழ் ஆகிய 2 மொழி களில் விளம்பரம் செய்தனர். அதுவும் ஒரு மாத காலத்திற் குள் கருத்துக்களைத் தெரி விக்க வேண்டும் எனக் கூறி னர். ஜனநாயக நாட்டில் அதி லும் பல மொழிகள் பேசக் கூடிய இந்தியாவில் ஒரு மாதம் மட்டுமே ஒதுக்கியது போதாது. நீர் மனித வாழ் வதற்கு முக்கியமானதாகும். தற்போது நீரை ஒரு பொரு ளாதாரப் பண்டமாக மாற்ற வும், முழுக்க, முழுக்க தனி யாரிடம் தரவும் ஏற்பாடு நடக்கிறது. இதில் வருடத் திற்கு ஆயிரம் கோடிக்கு விற்பனை மட்டும் நடை பெறுகிறது. ஏற்கனவே, பாரம்பரிய மாக நீரை சேர்க்க பாது காக்க ஏற்பாடு உள்ளது. இந்த கொள்கையை திரும்பப் பெற வேண்டும். குடிநீர், பாச னம், மின் உற்பத்தி அதன் பிறகே தொழிற்சாலை பயன் பாடு என இருந்ததை, மத் திய அரசு முதலில் தொழிற் சாலை என தலை கீழாக மாற் றும் முயற்சியே இந்த நீர்க் கொள்கை.இதனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக் கும். விவசாயமே பின்நோக் கிச் சென்று விடும். உள் ளாட்சி அமைப்புகள் குடிநீர் வழங்குவது சேவை என் பதை மாற்றி விற்பனை என மாற்ற வேண்டுமெனவும் இந்த கொள்கை கூறுகிறது. குடிநீர் மனிதனின் அடிப் படை உரிமைகளில் ஒன்று. எனவே, இதில் தனியாரை அனுமதிப்பதை ஏற்க முடி யாது.இவ்வாறு அவர் கூறி னார்.மாவட்டச் செயலாளர் அ.விஜயமுருகன், மாவட் டத் தலைவர் அ.குருசாமி, மாநிலக் குழு உறுப்பினர் மங்கையற்கரசி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: