பாரிஸ், மார்ச் 2 –
பிரான்ஸ் நாட்டின் பாஸ்க் மாகாணத் தில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்று கொண்டிருந்த அதிபர் சர்கோசியை மக்கள் விரட்டிய சம்பவம் அரங்கேறி யுள்ளது. இப்பகுதியில் பிரச்சாரம் செய்ய சர் கோசி வருகிறார் என்ற செய்தி பரவிய வுடன் ஏராளமான மக்கள் எதிர்ப்பு முழக் கங்களுடன் குழுமினர். சர்கோசியைப் பேச விடாமல் முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
பணக்காரர்களின் அதிபர் சர்கோசி என்றும், சர்கோசியே திரும்பி ஓடிப் போங்கள் என்றும் அவர்கள் முழக்கமிட்டார்கள். அவர் மீது காகித அம்புகளை எய்தனர். இந்நிலையில் கலவரத்தை ஒடுக்கும் காவல்துறைப் பிரிவினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் மக் கள் மீது தாக்குதல் தொடுக்க முனைகை யில், மற்றொரு பகுதியினர் சர்கோசியை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன் றனர். அப்போதும் மக்கள் எதிர்ப்பு முழக் கங்களை எழுப்பினார்கள். எதிர்ப்பைக் கண்ட சர்கோசி, பிரச்சாரம் செய்யாமல் திரும்பினார்.
தனக்கெதிரான இத்தகைய போராட் டங்களை எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சியே தூண்டி விடுகிறது என்று சர் கோசி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அவருடைய இந்தக் கருத்துக்கு சோச லிஸ்ட் கட்சி மறுப்பு வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மானு வல் வால்ஸ் செய்தியாளர்களைச் சந்தித் தபோது, கட்சித்தலைவர் பிரான்கோயிஸ் ஹாலண்டு மற்றும் கட்சியினர் அனைத்து வகையான வன்முறையையும் கண்டிக் கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நிகோலஸ் சர்கோசி அதி பர் பதவியேற்றார். அப்போதிருந்தே மக் களுக்கு எதிரான கொள்கைகளை நடை முறைப்படுத்தி வந்ததால், கடுமையான அதிருப்தியை சந்தித்துள்ளார். அவரைத் திரும்ப அனுப்பும் வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் இதையே பிரதிபலிக்கிறது.

Leave A Reply