மும்பை, மார்ச் 2-
எண்ணெய் மற்றும் இயற் கை எரிவாயுக் கழகத்தின் (ஓ என்ஜிசி) 5 சதவீதப் பங்குகள் வியாழக்கிழமை ஏலத்தில் விற்பனைக்கு வந்தபோது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், பொதுத்துறை நிறு வனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மாலை 3.32 மணிக்கு 12 கோடி ஓஎன்ஜிசி பங்குகளை வாங்கி உதவியது. எல்ஐசி முதல்முறை ஏலத் தில் விண்ணப்பித்தபோது, புரோக்கரின் தவறால், அதன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டி ருந்தது.
பொதுத்துறை பங்கு களை விற்று சூறையாடுவது என்ற காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கை யால் ஓஎன்ஜிசி பங்கு ஏலத் தில் அரசு நிறுவனமான எல் ஐசி தான் மீட்புக்கு உதவியது. ஓஎன்ஜிசி பங்குகள் 29.2 கோடி அளவுக்குத்தான் நிர்ண யிக்கப்பட்ட நேரத்தில் ஏலம் போய் இருந்தது. 5 சதவீதப் பங்குகளை விற்பது என்ற அரசின் முடிவின்படி 42.77 பங் குகளை விற்க திட்டமிடப்பட் டிருந்தது. இதன்படி மாலை 3.30 மணி நிலவரப்படி ரூ.8500 கோடிக்கான பங்குகள் மட்டும் விற்பனையாகி இருந்தன. ஏல நேரம் முடிந்து, 2 நிமிடத்திற்குப் பின்னர் எல்ஐசியின் மறு முயற் சியால் 12 கோடிப் பங்குகளை வாங்கியது.
ஏலத்தில் ரூ. 12,400 கோடியை திரட்ட வேண்டும் என ஒரு பங்கு விலை ரூ.290 என அடிப் படை விலை நிர்ணயிக்கப்பட் டது. இந்த விலை அடிப்படை யில் ஏலத்தொகை ரூ.8500 கோடி என்ற அளவிலேயே எட் டும் என நிபுணர்கள் தெரிவித் தனர்.ஓஎன்ஜிசியில் பங்குகள், தேசிய பங்குச்சந்தை (என் எஸ்இ) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மூலம் விற் கப்பட்டன. ஓஎன்ஜிசியின் பங்குகள், ஏலத்தின் துவக்கப் பட்ட நேரத்தில் மந்தமாகவே விற்பனை ஆகி இருந்தன.

Leave A Reply

%d bloggers like this: