பெண் விமானிகளுக்குசம உரிமை கோரிக்கை
புதுதில்லி, மார்ச் 2 –
பெண் விமானிகள் மற் றும் ஏரோநாடிகல் பிரிவுக் கழகத்தினர், விமானத் துறை யில் பெண் விமானிகளுக் கும், பெண் ஊழியர்களுக் கும் சம உரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை யை முன் வைத்துள்ளனர்.மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் பெண்கள் வானையும் தொடுவார்கள் என்ற கோஷத்துடன் இந்த கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது.
——————
கொலை வழக்கு:ராமதாசின் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை
திண்டிவனம், மார்ச் 2 –
அமைச்சர் சி.வி.சண் முகத்தின் உதவியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் உதவி யாளரிடம் சிபிஐ விசார ணை நடத்தியது.2006ம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலின்போது, திண்டிவனத்தில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில், பா.ம.கவினர் புகுந்து, கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். அமைச்சரைக் கொல்லவும் முயன்றனர். இதில் அமைச் சரைக் காப்பாற்ற முயன்ற அவரது உறவினர் முரு கானந்தம் என்பவர் வெட் டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக் கில் பாமக நிறுவனர் டாக் டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, மரு மகன், தம்பி சீனு கவுண்டர் உள்ளிட்டோர் மீது திண்டி வனம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பின்னர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பெயர்களை நீக்கி விட்டு மற்ற 11 பேர் மீது மட்டும் வழக்குத் தொடர்ந்து கைது செய்தனர்.வழக்கிலிருந்து ராம தாஸ், அன்புமணி ஆகி யோரின் பெயர்கள் நீக்கப் பட்டதை எதிர்த்து சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சிபிஐ விசாரணையையும் கோரியிருந்தார்.
அதை ஏற்று இந்த வழக் கை சிபிஐ வசம் நீதிமன்றம் ஒப்படைத்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி சிபிஐ அதிகாரிகள் இந்தக் கொலை வழக்கில், கோபி, இளஞ்செழியன், குமரன், நடராஜன், பன்னீர்செல் வம், ஜெயராஜ், ஆனந்த கிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய் தனர்.ஜனவரி 25ம் தேதி, ராம தாசின் தம்பி சீனுவாசன், 2006ம் ஆண்டு தேர்தலில் பாமக சார்பில் போட்டி யிட்ட கருணாநிதி ஆகி யோரையும் கைது செய் தனர்.இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக ராம தாசின் உதவியாளர் நட ராஜனிடம் வெள்ளியன்று சிபிஐ அதிகாரிகள் விசார ணை நடத்தினர். திண்டி வனத்துக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழு, நடரா ஜனை சுற்றுலா மாளி கைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
————————
திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்
திருச்சி, மார்ச் 2 –
திருச்சி விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானத்தில் கோலாலம்பூர் செல்லவிருந்த பயணிகளில் 2 பெண்கள் உட்பட மூவ ரை சோதனையிட்டதில் அவர்களிடம் இருந்து 13 கிலோ எபிட்ரின் என்ற போதைப் பொருளை சுங்கத்துறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.இதன் சர்வதேச மதிப்பு சுமார் 1 கோடியே 30 லட்ச ரூபாய் இருக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் தீவிர விசார ணை நடந்து வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: