ஜனார்த்தன ரெட்டிக்குகாவல் நீட்டிப்பு
பெங்களூர், மார்ச் 2 –
பலத்தக் காவலுடன் நீதிமன்றம் கொண்டுவரப் பட்ட கர்நாடகா சுற்று லாத்துறை முன்னாள் அமைச்சரும் சுரங்க உரி மையாளருமான ஜி. ஜனார்த்தன ரெட்டிக்கு சிபிஐ காவலை மார்ச் 12 வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டது.சட்டவிரோத சுரங்க வழக்கில் ரெட்டி உள் ளிட்ட 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள் ளது.
கடந்த அக்டோப ரில் சிபிஐ அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.ஜனார்த்தனரெட்டி வெள்ளிக்கிழமை அதிகா லையில் பெங்களூர் கொண்டுவரப்பட்டார். பலத்தக் காவலுடன் அவர் நீதிமன்றத்திற்கு அழைத் துவரப்பட்டார். இந்த வழக்கில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.முனியப்பா மற்றும் சில அதிகாரிக ளும் சேர்க்கப்பட்டுள் ளனர். வழக்கறிஞர்களுக் கும் ஊடகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறை யாக மாறியது.
————————
வருவாய் அதிகாரி கைது
ரூர்கேலா, மார்ச் 2 –
ரூ.3000 லஞ்சம் வாங் கிய வருவாய்த்துறை மேற் பார்வையாளர் பரசுராம் பானா(50) வையும் ஓய்வு பெற்ற அலுவலக உதவியா ளர் ரமேஷ் மல்லிக்கையும் ஊழல் கண்காணிப்பு அதி காரிகள் கைது செய்தனர்.சுந்தர்கார் மாவட்டத் தில் பிரமித்ராபுர் தாலுகா வில் மணல் வியாபாரி ரமேஷ் சந்திரா அமத் என்பவருக்குச் சொந்த மான லாரியை வருவாய்த் துறை பறிமுதல் செய்தது.
லாரியை விடுவிக்க ரூ.4000 லஞ்சம் தருமாறு பானா கேட்டுள்ளார். பேரத்தில் ரூ.3000 கொடுப்பது என்று முடிவானது. அமத் ஊழல் கண்காணிப்பு அதிகாரி களிடம் புகார் செய்தார்.அமத் ரூ.3 ஆயிரத்தை பானாவிடம் கொடுத்த போது ஊழல் கண்கா ணிப்பு அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். பானா தன் னிடம் இருந்த பணத்தை ரமேஷ் மல்லிக்கிடம் கொடுத்தார். பானா, மல்லிக் ஆகிய இருவரையும் ஊழல் கண்காணிப்பு அதிகாரி கள் கைது செய் தனர்.
———————
ரஷ்ய சுற்றுலா பயணி மீட்பு
ஸ்ரீநகர், மார்ச் 2 –
குல்மார்க் பனிமலைக ளில் சாகச விளையாட் டுகளில் ஈடுபட்ட ரஷ்ய சுற்றுலாப்பயணி நட் டாலி கிரிகோரோவா மீட் கப்பட்டார். பனிச்சறுக்கில் ஆடப் போன ரஷ்யப் பெண் நட் டாலி புதன் காலை முதல் காணவில்லை. அவரைக் காப்பாற்ற மீட்புக்குழு அனுப்பப்பட்டது. அபர் வத் மலைப்பகுதியின் உய ரங்களில் புதன் இரவில் அவர் கண்டுபிடிக்கப்பட் டார். காவல்துறை, சுற்று லாத்துறை, கேபிள் கார் நிறுவனம் ஆகியவை இணைந்த கூட்டு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக் கைக் குழுவால் நட்டாலி மீட்கப்பட்டார்.
—————————-
அசாமில் உயரும் புலிகள் எண்ணிக்கை
குவாகாத்தி, மார்ச் 2 –
அசாமில் புலிகள் எண் ணிக்கை உயர்ந்து வருகி றது என்றும் எதிர்காலத் தில் நாட்டில் அதிக புலி கள் இருக்கும் மாநிலமாக அசாம் மாறும் என்றும் மாநில வனத்துறை அமைச்சர் ராக்கிபுல் ஹுசேன் தெரிவித்தார்.கால் தடங்கள், தொலை தூர புகைப்பட உணர்வு சாதன அறிக்கைகள் ஆகி யவற்றின் அடிப்படை யில், காசிரெங்கா உள் ளிட்ட பல வனவிலங்கு சர ணாலயங்களில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள் ளது என்பதற்குரிய அறி குறிகள் தென்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: