சென்னை, மார்ச், 2 –
உயர்தரமான சிலிக்கான் தயாரிக்கும் மொமென் டிவ் நிறுவனம் சென்னை அருகே படப்பையில் இரண்டாவது கட்ட ஆலையை துவக்கியுள்ளது.வாகன விளக்கிலும் வெப்பம் உட்புகாமல் இருக்க வாகன கூரைகளிலும் சிலிக்கான் பயன்படுத்தப்படு கிறது. டார்க்கி டவல்,ஷாம்பூ உள்ளிட்ட தனிநபர் பயன்பாடு பொருட்களிலும் சிலிக்கான் பயன்படுத் தப்படுகிறது. சருமபாதுகாப்பு பொருட்களை தயாரிக் கும் புராக்டர் அன்ட் கேம்பிள் உள்பட பல நிறுவ னங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆவர். இரண்டாவது ஆலையில் 20 மில்லியன் டாலர் கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சிலிக்கான் உள்நாட்டு தேவை போக மத்திய கிழக்கு நாடுகள் உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.பி.நலைன் கூறினார். தற்போது துபாய்க்கு ஏற்றுமதியாவதாகவும் விரைவில் ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். தமது நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை பெங்களூரில் வைத்துள்ளது என்றும் அதில் 150 பேர் பணிபுரிவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் சிலிக்கான் வர்த்தகம் அதிகரித்துள்ளதால் அதிக முத லீடு செய்துள்ளதாக மொமென்டிவ் தலைமை செயல் அதிகாரி கிரைக் ஓ மோரிசன் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: