புதுதில்லி, மார்ச் 2-
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி யின் அலுவலக அறையில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட் டிருந்தது குறித்து விசாரணை நடத்த புலனாய்வு அமைப் புக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.அந்தோணியின் அலுவலகத்தில் ஒட்டுகேட்கும் கருவிகள் வைக்கப் பட்டிருந்தது பிப்ரவரி 16-ம் தேதி தெரிய வந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு புலனாய்வு அமைப்பை பாதுகாப்புத் துறைச் செயலாளர் சசி காந்த் ஷர்மா கேட்டுக் கொண்டதாகவும் அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பாதுகாப்பு அமைச்சகத்தில் தொலை பேசி இணைப்புக்கான பணிகளை மேற்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டு நிதி அமைச்சர் பிர ணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இதே போன்று ஒட்டுகேட்கும் கருவிகள் வைக் கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அப் போது இதுகுறித்து விசாரணை நடத்த நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பாதுகாப்புத் துறையின் அலுவலகத்திலும் ஒட்டுகேட்கும் கருவி கள் இருந்ததாகக் கூறப்படுவது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: