மொத்த உள்நாட்டு உற்பத்தி அக்டோபர்-டிசம்பருக்கு இடைப்பட்ட ஒன்பது மாத காலத்தில் 6 .1 சதவீதமாகச் சரிந்துள்ளது.இரண்டாண்டுகளில் இவ்வளவு குறைவாக ஜி.டி.பி. வளர்ச்சி இருந்ததே இல்லை. பரமபதம் போல பல துறைகள் இறக்கிவிடுவதும், சில துறைகள் ஏற்றி விடுவதும் நடந்துள் ளன. பரமபத பாம்புகளாய் இருந்துள்ள துறைகள் தொழில், சுரங்கம், விவசாயம் ஆகியன ஆகும்.
தொழில் துறை வளர்ச்சி 7.8 சதவீதத்தில் இருந்து 0.4 சத வீதத்திற்கு குறைந்துள்ளது.விவசாயம் 11 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதத்திற்கு வீழ்ந்துள்ளது. கட்டு மானத் தொழிலிலும் சரிவுதான்.பரமபத ஏணிகளாய் இருந்துள்ள துறைகளில் மின்சாரம், எரிவாயு உண்டு. வியாபாரம், ஓட்டல்கள், போக்கு வரத்து, தகவல் தொடர்பில் பெரிய சரிவு இல்லை.

Leave A Reply

%d bloggers like this: