கோவை, மார்ச். 2-கோவையில் உலக சீறுநீரக தினத்தை முன்னிட்டு உலக சிறுநீரக விழா ராம்நகர் எஸ்.பி.டி. மருத்துவமனையில் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து எஸ்.பி.டி. மருத்துவமனை தலைவர் எஸ்.பி.தியாகராஜன் தெரிவித்ததாவது,உலக சிறுநீரக தினம் மார்ச் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு, எஸ்.பி.டி மருத்துவமனையின் சார்பில் மார்ச் 5ம் தேதி முதல் 9 ம் தேதி வரை இலவச சிறுநீரக பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. மேலும், மார்ச் 10ம் தேதி முதல் மாலை 5.30 மணிக்கு கோகை கிக்கானி பள்ளியில் ‘சந்திப்போம் சிந்திப்போம்’ எனும் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் துவங்கி வைக்கிறார். பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்குகிறார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல தலைவர் பாஸ்கரன் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். பட்டிமன்ற நகைச்சுவைப் பேச்சாளரான ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளும் கலந்துரையாடல் நிகழ்த்தி நடைபெறும்என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: