வாஷிங்டன், மார்ச் 2-
பாரக் ஒபாமாவின் எண் ணெய்க் கொள்கை எதிர் பார்த்த பலன்களைத் தராத தாலும், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை குறித்து குடியரசுக்கட்சியின ரின் விமர்சனங்களுக்குப் பதி லளிக்க இயலாத பாரக் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் இந்தி யர்கள், சீனர்கள் மற்றும் பிரே சில் நாட்டவர்கள் அதிக அள வில் கார் வாங்கி சொகுசாக வாழ்வதன் காரணமாக பெட் ரோல், டீசல் விலை உயர்ந்துள் ளது என்று தனது வயிற்றெரிச் சலை வெளிப்படுத்தியிருக்கிறார்.இந்தியர்கள், சீனர்கள் மற் றும் பிரேசில் நாட்டுக்காரர் கள், அமெரிக்கர்களைப் போல கார்களை வாங்குவதும் விலை யைப் பற்றிக் கவலைப்படா மல் பெட்ரோல் வாங்குவதன் காரணமாக பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக் குக் காரணம் என்று நியூ ஹாம் ப்ஷையரில் ஒபாமா தெரிவித் தார்.
அமெரிக்காவில் 1 காலன் பெட்ரோல் விலை 4 டாலராக அதிகரித்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிபொருள் குறித்து உரையாற்ற நாசுவாவிலிருந்து நியூஹாம்ப்ஷையர் சென்ற பாரக் ஒபாமா பெட்ரோல் விலை அதிகரிப்பு, அமெரிக் கர்களின் கையைக் கடிக்கிறது என்று குறிப்பிட்டார்.கடந்த 5 ஆண்டுகளில் சீனா வில் ஓடும் கார்களின் எண் ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து விட்டது. 2010ம் ஆண்டில் சீனாவில் மட்டும் 1 கோடி கார்கள் ஓடுகின்றன. ஒரு வருடத்தில் 1 கோடி கார் கள் எண்ணிப் பாருங்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று பாரக் ஒபாமா தெரிவித்தார்.சீனர்களும் இந்தியர்களும் வசதியாக உள்ளனர். அமெரிக் கர்களைப் போல அவர்களும் கார்களை வாங்க நினைக்கின் றனர்.
இதனால் தேவை அதி கரித்துள்ளது என்று ஓபாமா தெரிவித்தார்.அதிகரித்து வரும் பெட் ரோல் தேவை மற்றும் அதி கரித்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்குத் தகுந்த திட்டமற்ற நிலை மற்றும் மாற்று எரிபொருள் கொள் கைகள் எதுவும் பாரக் ஒபாமா கைவசம் இல்லை என்பதை இத்தகைய பேச்சுகள் வெளிப் படுத்துகின்றன.மாற்றுத் திட்டங்கள் கை வசம் இல்லாத நிலையில், பெட்ரோலிய நிறுவனங் களுக்கு அளித்து வரும் மானி யங்களை வெட்டுவது போன்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
சுத்தமான மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க அதிக முதலீடு செய்ய வேண் டும் என்று கூறி வருகிறார்.இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பிரேசில் நாட்டுக்காரர் கள் மீது பழியைப் போட் டாலும் பெட்ரோலின் விலை யைக் குறைப்பது பற்றி பாரக் ஒபாமா எதுவுமே பேசவில்லை.எரிபொருள் விலையைப் பொறுத்த வரை எந்த விதமான மாயமந்திரமும் என்னுடைய நிர்வாகத்தில் இல்லை. எனி னும் நுகர்வோர்களின் சிரமத் தைக் குறைப்பதற்கான வழி யைக் கண்டுபிடித்து, நெருக் கடியைச் சமாளிக்கும் வழி முறைகளை ஆராய்ந்து வரு கிறோம் என்று ஒபாமா தெரி வித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.