சென்னை, மார்ச், 2 –
சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் அறி வியல் ஆசிரியர் ஜெகதீஸ்வ ரன் தற்கொலை முயற்சிக்கு காரணமான கல்வி அதி காரி ரவிச்சந்திரன் பணி யிடை நீக்கம் செய்யப்பட் டுள்ளார்.கொருக்குபேட்டை புத்தா தெருவில் அமைந் துள்ள சென்னை மாநக ராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஜெகதீஸ் வரன் பணியாற்றி வருகி றார். வியாழனன்று (மார்ச் 1) பள்ளியில் ஆண்டு விழா நடைபெறுவதாக இருந் தது. இந்நிகழ்ச்சிக்கு கல்வி அதிகாரி ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். விழா தொடங்குவதற்கு முன்னர் பள்ளிக்கு வந்த ரவிச்சந்திரன் திடீரென்று ஆய்வில் ஈடுபட்டார். 10ம் வகுப்பு மாணவிகள் அறிவி யல் கையேட்டை ஆசிரியர் கள் அடிக்கடி சரிபார்த்து கையெழுத்திடவில்லை என்று மாணவிகள் முன்பே கடுமையாக பேசி யிருக்கிறார். “ஆய்வு செய்ய வில்லை என்றால் மெமோ கொடுப்பேன்’’ என்றும் அந்த அதிகாரி ஆசிரியர் களை பார்த்து கூறியிருக்கி றார். இதனால் மனமு டைந்த ஆசிரியர் ஜெகதீஸ் வரன் கழிவறைக்கு சென்று ஆசிட் குடித்துவிட்டு தன் மனைவிக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள் ளார்.இந்த தகவல் மற்ற ஆசி ரியர்களுக்கு தெரிந்தவுடன் ஜெகதீஸ்வரனை மீட்டு அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த் தனர். ஆசிரியர்களை தரக் குறைவாக நடத்தும் கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி அனைத்து ஆசிரியர் களும், அரசு ஊழியர் சங் கத்தினரும் சென்னை ரிப் பன் மாளிகையை முற்று கையிட்டனர்.ஆறுமணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு கல்வி அதிகாரி ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிடுவதாக மேயர் சைதை துரைசாமி கூறினார். இதையடுத்து இரவு 10.30 மணிக்கு போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்த முற்றுகை போராட் டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ராஜேந்திரன், வெற்றிசெழியன், பூபாலன், குலாம்தர் தகீர், பெருமாள் சாமி, அரசு ஊழியர் சங்கத் தின் நிர்வாகிகள் வெற்றி ராஜன், பட்டாபி, கலைச் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: