திருவள்ளூர், மார்ச், 2 –
கும்மிடிப்பூண்டியை அடுத்த துராபள்ளம் கிரா மத்தில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிமன்ற ஆணையை காவல்துறையி னர் நிறைவேற்ற வேண்டும் என விவசாய தொழிலா ளர் சங்கம் கேட்டுக் கொண் டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-கும்மிடிப்பூண்டி அரு கில் உள்ள துராபள்ளம் கிராமத்தில் முனியம்மாள் என்பவர் வசித்து வருகி றார். இவரின் கணவர் சிவ லிங்கம் இறந்த பிறகு முனி யம்மாள் என்பவரே குடும் பத்தை நடத்தி வருகிறார். மேலும் அவர்களுக்கு சொந்த மான ஒரு ஏக்கர் 43 செண்ட் விவசாய நிலத்தை யும் பராமரித்து வருகின்ற னர். முனியம்மாள் கணவர் இறந்த பிறகு 36பி, 36எப், 42பி ஆகிய சர்வே எண்க ளில் உள்ள விவசாய நிலத் தில் அதே கிராமத்தை சேர்ந்த அகதீசன், முனுசாமி, முரளி, பிரகாஷ் ஆகியோர் அத்துமீறி நுழைந்து மரங் களை வெட்டுவது, மணல் அள்ளிச் செல்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதை முனியம்மாள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அகதீசன் வகையறாக்கள் கழுத்தை நெறித்து கொன்று விடுவேன் எனவும் பய முறுத்தியுள்ளனர்.இந்த நிலையில் சொந்த நிலத்தை அன்னியர் சொந் தம் கொண்டாடுவதை தடுக்க முனியம்மாள் நீதி மன்றத்திற்கு சென்றுள்ளார். பொன்னேரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் முனியம்மாள் குடும்ப சொத் தில் உரிமை கொண்டாட எந்த ஆவணமும் அகதீசன் வகையறாவிடம் இல்லாத தால் மேற்கண்ட நிலத்தில் பிரவேசிக்க கூடாது. மேலும் போலீசார் முனி யம்மாளுக்கு பாதுகாப்பும் கொடுத்து நிலத்தையும் மீட்டுத்தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றமும் இதனை உறுதி செய்துள்ளது.இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் இ.ராஜேந்தி ரன் கூறும் போது, இந்த நில அபகரிப்பு விஷயத்தில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள உத்தரவை ஆரம்பாக்கம் காவல்துறையினர் மதிக்கா மல், அகதீசன் வகையறாக் களிடம் பணம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் வருடக் கணக் கில் காலதாமதம் செய்து வருகின்றனர். காவல்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல்நிலையத்தை முற்றுகை யிடுவோம் என்று கூறியுள் ளார்.

Leave A Reply

%d bloggers like this: