திருவாரூர், மார் 2-
திருவாரூர் மாவட்டத் தில் உள்ள அரசினர் விடுதி களில் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன், மாணவ – மாணவிகளுக்கு வழங்கப் படும் உணவு வகைகளை யும் குடிநீரையும் பார்வை யிட்டு திடீர் ஆய்வு செய் தார்.பூந்தோட்டம் தாட்கோ அரசினர் மாணவர் விடுதி, நெடுங்குளம் மாணவியர் விடுதி ஆகியவற்றில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த காப் பாளரை அழைத்து மாணவ – மாணவியர்க்கு வழங்கப்படும் உணவுகளை யும் இருப்பேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய் தார். அரசின் வழிகாட்டு தலுக்கேற்ப உள்ள உணவு வகைகளை கட்டாயம் வழங்க வேண்டும் என கூறி னார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஜீவானந்தம், தமிழ் மணி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் ஆகி யோர் உடன் சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: