சென்னை, மார்ச் 2 –
2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்ற ரயில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந் தனர். 75 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்த அரசு ரயில்வே காவல்துறை, 600 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை அரக்கோணம் நீதிமன் றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்துள்ளது.
ரயில்வே அதி காரிகள், பயணிகள் உட்பட 170 சாட்சியங்களின் அடிப் படையில், இந்த விபத்து முற்றிலும் ரயில் ஓட்டுநரின் கவ னக்குறைவால் ஏற்பட்ட விபத்துத்தான் என்று குற்றப்பத் திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. ரயிலை மிக வேகமாக இயக்கி, சிக்னல் களை கவனிக் காமல் மொபைலில் பேசிக் கொண்டு சென்று விபத்துக் குள்ளாக்கிய தாக ரயில் ஓட்டுநர் ராஜ்குமார் (வயது 40) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply