வாஷிங்டன், மார்ச் 2 –
ஆயுதம் இல்லாத நிலை யில் பல அமெரிக்கர்கள் காவல்துறையினரால் கொல் லப்படுவது அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் நீதியை நிலைநாட்டும் நடைமுறை யையே அந்நாட்டு மக்கள் கேள் விக்குள்ளாக்கி உள்ளனர்.
கடந்த மாதத் துவக்கத் தில் நியூயார்க்கில் உள்ள தனது பாட்டியின் வீட்டு குளியலறையில் 18 வயதான ரமர்லே கிரஹாம் குளித்துக் கொண்டிருக்கையில் காவல் துறை அதிகாரிகளால் சுட் டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியபோது, கிரஹாம் ஆயு தந்தாங்கி இருந்தார் என்று கூறினர். ஆனால் அந்த வீட் டிலிருந்து எந்தவித ஆயுதத் தையும் காவல்துறையினர் கைப்பற்றவில்லை. வீட்டிற் குள் நுழைவதற்கு எந்தவித மான சட்ட அனுமதியை யும் சுட்டுக்கொன்ற காவல் துறை அதிகாரி பெற்றிருக்க வில்லை. இந்த அதிகாரிகள் மீது எந்தவிதமான வழக்கும் இதுவரை பதிவு செய்யப் படவில்லை.அந்த இளைஞர் கருப்பி னத்தைச் சேர்ந்தவர். அந்த இனத்தின் மீதான வெறி தான் துப்பாக்கியால் சுட்ட தற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
சுட்டவர் மற்றும் அவரது மேலதிகாரி ஆகிய இருவரின் துப்பாக்கி கள் மட்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்ப தைத்தவிர வேறு எந்த நட வடிக்கையும் இருவர் மீதும் எடுக்கப்படவில்லை. அதே போன்று, பிப்ரவரி 7 ஆம் தேதியன்று கடற்படை யைச் சேர்ந்த சார்ஜண்ட் மேனுவல் லாக்கின்ஸ் தனது இரண்டு மகள்களுடன் வீட் டிற்குத் திரும்பிக் கொண் டிருந்தார். தனது வாக னத் தில் வைத்து அவர் சுடப் பட்டார். இதற்கான கார ணம் பற்றித் தெரிவிக்கப் படவில்லை.பிப்ரவரி 19 ஆம் தேதி யன்று, டோனி ஜோன்ஸ் என்பவர் காவல்துறையின ரால் சுடப் பட்டார். இதில் அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது.
2009 ஆம் ஆண்டில் காவல்துறை யினரால் சுட்டுக்கொல்லப் பட்ட ஆஸ் கார் கிரேண்ட் என்பவருக்கு இவர் உறவின ராவார். ஆஸ்கார் கிரேண்ட் டின் கொலை ஓக்லாண்டு மாகாணத்தில் உள்ள காவல் துறையினரின் ஒடுக்குமுறை களுக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழவைத்தது. அமெரிக்கக் காவல்துறை யினரின் ஒடுக்குமுறைகளுக்கு அடை யாளமாக ஆஸ்கார் கிரேண்டின் கொலையை மனித உரிமை ஆர்வலர்கள் முன் னிறுத்தினர்.
கடந்த மாதத்தில் புளோ ரிடா மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவம் அப் பகுதி மக்களை உலுக்கி எடுத்தது. சந்தேகத்துக்குரிய நபர் என்று கூறி 20 வயது டேனியல் மட்ஸ்லே என்ப வரை கைவிலங்கு மாட்டி ஒரு காவல்துறை அதிகாரி அழைத்துச் சென்றார். அத னால் மனரீதியான பாதிப்பு டேனியலுக்கு இருந்தது. பின்னர், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவத் தை எதிர்த்து நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒரு பகுதியாக கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க மிளகுத்தூளை மாணவர் கள் மீது காவல்துறையினர் வீசினர். இவை உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறை சம் பவங்களை எதிர்த்து அமெ ரிக்க மக்கள் குரல் கொடுக் கத் துவங்கியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.