கிருஷ்ணகிரி, மார்ச் 2-
மாஞ்செடி வளர்க்க விவசாய மின் இணைப்பை பயன்படுத்தியதற்காக காவல் துறை மூலம் மிரட்டி அபராதம் வசூலித் துள்ளது மின்சார வாரியம். பின்னர் இணைப்பை துண்டித்தும் அராஜக நடவடிக்கைகளில் அத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஆயிரக் கணக்கான மாஞ்செடிகள் கருகும் நிலை யில் உள்ளதாக குறைதீர் கூட்டத்தில் விவ சாயிகள் குமுறினார்கள்.கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் புதனன்று (பிப்.29) மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் பேசிய விவசாயி ஜி.கோகுல் கூறிய தாவது; சந்தூர் பகுதியில் மாஞ்செடி உற் பத்தியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பல தலைமுறைகளாக இப்பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ் வாதாரமாக செடி வளர்ப்பு இருந்து வரு கிறது. அண்மையில் முன்னறிவிப்பு ஏது மின்றி வந்த மின்திருட்டு தடுப்பு பிரிவு அதி காரிகள், விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மிரட் டியுள்ளனர். அபராத தொகையை கட்டிய பின்னரும் மின் இணைப்பை துண்டித் துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மாஞ்செடிகள் கருகும் நிலையில் உள்ள தாக தெரிவித்தார்.மின்சார வாரியத்தின் இச்செயலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மின் திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை யின் கீழ் செயல்படுவதாகவும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு தாங்கள் பொறுப் பாக முடியாது எனவும் மின்சார வாரிய அதிகாரி விளக்கம் அளித்தார். மாவட்ட ஆட்சியருடன் கலந்து இப்பிரச் சனைக்கு தீர்வு காணலாம் என்று வருவாய் அலுவலர் தெரிவித்தார்.ஆவின் கொள்முதல் செய்யாமல் நிரா கரிக்கும் பாலுக்கு கூட தனியார் நிறுவனங் கள் 28 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குவதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஐஎஸ்ஐ தர அளவிலான புதிய முறையை ஆவின் பின்பற்றினால் பால் உற்பத்தி யாளர்களுக்கு உரிய விலை கிடைக்கும் என வும் அவர்கள் கூறினார்கள். கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் அதிகரித் துள்ள பாலை கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் புதிய கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். பெனு கொண்டாபுரம் ஏரியை ஒட்டி பாம் கோலாவுக்கென ஒதுக்கப்பட்ட 90 ஏக்கர் நிலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த இடத்தில் செங்கல் சூளை செயல்படுவ தாகவும் அதன் தேவைக்காக ஏரி மண் அள்ளு வதாகவும் பனை உள்ளிட்ட மரங்கள் வெட் டப்படுவதாகவும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதே புகார் கடந்த இரண்டு கூட்டங்களில் தெரிவித்த போதி லும் பதிலளிக்க அதிகாரிகள் எவரும் முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.