சென்னை, மார்ச், 1 -வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கவும், மூலிகை மருந்தை அறிமுகம் செய்யவும் வாரந்தோறும் கருத்தரங்கம் நடைபெறும் என்று வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அதன் செயலாளர் கே.உமாபதி விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:-வெண்புள்ளிகளை மறைக்க மூலிகை மருந் தினை இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறு வனம் கண்டுபிடித்துள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூ பிக்கப்பட்ட இம்மூலிகை மருந்தினை 300 முதல் 400 நாட்கள் தொடர்ந்து எடுத் துக் கொண்டு வந்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பான பழைய நிறம் ஏற்படுகிறது.திரவமருந்து மற்றும் மேலே பூசுவதற்கான கிரீ மும் கொண்டுள்ள இந்த மருந்திற்கு லூக்கோஸ்கின் என்று பெயரிட்டு உள்ள னர். சென்ற ஆண்டு டிசம் பர் 17 அன்று சென்னை யில் இந்த மூலிகை மருந் தினை அறிமுகப்படுத்தி னோம். தமிழக அரசின் கூடு தல் தலைமை செயலாளர், முனைவர் ஆர.கிருஸ்து தாஸ் ஐஏஎஸ், காந்தி லூக் கோஸ்கின் மருந்தினை வெளியிட்டார். அம்மருந் தினை உபயோகித்து வரும் வெண்புள்ளிகள் கொண்ட அனைவரும் மருந்து சிறப் பாக செயல்படுவதாக தெரி விக்கின்றனர்.ஏற்கெனவே பல்வேறு மருந்துகளை உட்கொண்டு எவ்வித பலனும் இன்றி வேதனையில் உள்ள வெண் புள்ளிகளால் பாதிக்கப்பட் டவர்களுக்கு அவர்களின் வேதனையை போக்குவ தோடு மட்டுமல்லாமல் அவர்கள் இழந்த பழைய நிறத்தை மீண்டும் பெற இம் மூலிகை மருந்து உதவுகிறது.எனவே இந்த மூலிகை மருந்தினை தமிழ்நாட்டில் உள்ள வெண்புள்ளிகள் கொண்ட 36 லட்சம் பேருக்கு கொண்டு சேர்க்க வெண்புள்ளிகள் விழிப் புணர்வு இயக்கம் – இந் தியா முடிவு செய்துள்ளது. இதற்காக 2012 மார்ச் 4 ஞாயிறு முதல் ஒரு வருடத் திற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை லூக்கோஸ்கின் மூலிகை மருந்து அறிமுக கருத்தரங் கம் நடைபெற உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர்கு ஏதுவான வாரங் களில் பங்கேற்கலாம். ஒவ் வொரு வாரமும் 75 பேர் மட்டுமே பங்கேற்க முடி யும். பங்கேற்க விரும்புவோர் 044-2226 5507 அல்லது 6538 1157 என்ற எண்ணில் தங்கள் பெயரை முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டு கிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.