திருவாரூர், மார்ச் 1-
வேளாண்மையை வணிக ரீதியில் செய்யும் அளவிற்கு ஒவ்வொரு விவசாயியும் தயாராக வேண்டும் என மேனங்குடியில் நடை பெற்ற வேளாண் கருவிகள் வழங்கும் விழாவில் திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் வேண்டுகோள் விடுத்தார்.திருவாரூர் மாவட்டத் தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் மையில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்பங் களை கையாளுதல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி மற்றும் அரசு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கும் விழா திருவாரூர் மாவட்டம் நன் னிலம் வட்டம் மேனங்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர்,புதிய தொழில் நுட்ப முறைகளையும் இயந்திரங் களையும், இடு பொருட் களையும் ஒவ்வொரு விவ சாயியும் பெற்று வணிக ரீதி யில் விவசாயத்தை மேற் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். பின்னர் நடவு இயந்திரம், மினி டிராக்டர், களை அமுக்கும் கருவி என 18 லட்சம் ரூபாய் மதிப்பீட் டிலான கருவிகளை 7 பய னாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.