போபால்: இந்தூர் மத்திய சிறைச் சாலைக் கண்காணிப்பாளராகப் பணிபுரி யும் புருஷோத்தம் சோம்குன் வாருக்குச் சொந்தமான இல்லங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டன.இந்தூர் மற்றும் போபால் நகரில் சோம்குன்வாருக்குச் சொந்தமாக உள்ள வீடுகளில் லோக் அயுக்தா காவல்துறை யினர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோத னையில் சோம்குன்வாருக்குச் சொந்தமான 3 வீடுகள், 1 ஹாஸ்டல், 4 கடைகள், 7 வீட்டு மனைகளுக்கான பத்திரங்கள் கைப் பற்றப்பட்டன. மேலும் ரூ.5.62 கோடி ரொக்கம், 3 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்து களின் மதிப்பு ரூ.3 கோடியாகும். தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் இச்சொத்து மதிப்பு உயரக்கூடும் என்று இந்தூர் லோக் அயுக்தா காவல்துறைக் கண்காணிப்பாளர் வீரேந்திர சிங் பத்திரி கையாளர்களிடம் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: