அம்பத்தூர், மார்ச், 1 –
பழைய வண்ணாரப் பேட்டை பகுதியில் வசிப்ப வர்கள் அன்வர் ஷெரீப் மற்றும் முனுசாமி. அன்வர் ஷெரீப்பின் மகள் அபுபானு (15), முனுசாமியின் மகள் மகேஷ்வரி (15). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகி றார்கள். புதன்கிழமை (மார்ச் 1) மாலை இருவரும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தோழியை பார்ப்பதற் காக பொன்னேரி சென்றனர். பின்னர் வீடு திரும்புவதற்காக பொன்னேரி ரயில் நிலையம் வந்தனர். தண்டவாளத்தை கடந்த போது கும் மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் இரண்டு பேர் மீதும் மோதியது. ரயில் மோதியதில் அபுபானுவும், மகேஷ்வரியும் பலத்த காயம் அடைந்த னர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச் சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி கடத்தலா?
அம்பத்தூர், மார்ச், 1 – அம்பத்தூர் அத்திப்பட்டு பெரிய காலனி பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் இளங்கோவன். இவரது மகள் சுகன்யா (16). சுகன்யா மேற்கு முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் இளங்கோவன் புகார் அளித்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவியை யாராவது கடத்தினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply