அம்பத்தூர், மார்ச் 1-
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ராம்குமார் (18). இவர் தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில் உள்ள பெரி யப்பா மகன் வீட்டில் தங்கி குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ. படித்து வந்தார்.இந்நிலையில் புதன்கிழமை காலை 8 மணி அளவில் கல் லூரி செல்வதற்காக ஊரப்பாக்கத்தில் இருந்து மின்சார ரயி லில் ஏறினார். செங்கல்பட்டில் இருந்து வரும் ரயில் என்ப தால் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ராம்குமார் வாசலில் தொங்கியபடி பயணம் செய்தார். பெருங்களத்தூருக்கும், தாம்பரத்துக்கும் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தை ஒட்டி யிருந்த மின் கம்பத்தில் ராம்குமாரின் தலை மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக பலியானார்.

Leave A Reply