புதுதில்லி: பல மாநிலங்களிலிருந்து எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படை மசோதாவில் மாநிலங் களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திவிவேதி தெரி வித்தார்.ரயில்வே பாதுகாப்புப் படை மசோதா விவகாரத்தில் மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். மாநில அரசுகளின் ஒப்புதலு டனே முடிவுகள் எடுக்கப்படும் என்று திவிவேதி தெரிவித்தார்.
ரயில் பயணிகள், அவர்களது உடை மைகள் மற்றும் சரக்கு ரயில்களின் பாதுகாப்பை அதிகரிப்பது போன்ற முக் கியமான அடிப்படை விஷயங்கள் நீர்த் துப் போகாதவகையில் இருக்க வேண்டும் என்றும் திவிவேதி தெரிவித்தார்.முன்னதாக, இதே கருத்தை வலியுறுத் தும்வகையில், பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையை சம்பந்தப்பட்ட துறைகள் பாதுகாக்க வேண்டும் என்று தினேஷ் திவிவேதி தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: