இந்தியாவில் உயர் கல்வித்துறை வணிக மயமாகி பல ஆண்டுகள் ஆகின்றன. கலைக் கல்லூரியானாலும் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளாக இருந்தாலும் பணம் இருந்தால்தான் படிப்பு என்ற நிலை உள்ளது. வணிகமயத்திற்கு ஏற்ப புற்றீசல்கள் போல் தனியார் கல்லூரிகளும் பெருகிவிட்டன.
பெரும்பாலான கல்லூரிகளில் வசதியான கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தமான விடுதி கிடையாது.ஆரோக்கியமான உணவு கிடையாது. ஆனால் கல்விக் கட்டணம் என்ற பெயரில் நன்கொடை மட்டும் தாராளமாக வசூ லிக்கப்படுகிறது.பல தனியார் கல்லூரி களில் அடிப்படை வசதி இல்லாவிட்டாலும் பரவா யில்லை; மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு கூட கிடையாது. சமீபத்தில் கூட பண்ருட்டி அருகே அரசு பொறியியல் கல்லூரி மாணவி கொசுக்கடியால் கடுமையான காய்ச் சலுக்கு ஆளாகி உயிரிழந்தார்.அதேபோல் கல்லூரி விடுதிகளுக்கு சுற்றுச் சுவர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாததால் சமூகவிரோதிகளால் மாணவிகள் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவங்களும் தமிழ் நாட்டில் நடந்துள்ளன.
இந்த நிலையில் மாநில அரசின் உயர் கல்வி மன்ற துணைத் தலைவராக சிந்தியா பாண்டியன் பொறுப்பேற்றுள்ளார். திரு நெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரான அவர், பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசுகையில், மாநிலத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிக கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் அரசு ஏற்படுத்த உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவையெல்லாம் வரவேற்கத் தக்கவைதான். ஏனென்றால் பல ஆண்டுகளாக இடதுசாரி மாணவர் அமைப்பு களும் ஆசிரியர் அமைப்புகளும் இந்த கோரிக் கையைத்தான் ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அரசுதான் கண்டுகொள்ளவில்லை.ஆரோக்கியமான யோசனைகளை தெரிவித்த அவர், “அதிகமான அரசு கல்லூரிகள் தொடங் கப்படும் போது அதிக மாணவர்கள் படிக்க வரு வார்கள் என்றும் அப்போது கல்வியின் தரம் குறைந்துவிடும்’’ என்ற மோசமான கருத் தையும் வெளியிட்டுள்ளார். உயர்கல்வி என் றாலே சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவின ருக்கு மட்டுமே என்ற நிலை பல ஆண்டுகாலம் இருந்தது. ஆனால் இட ஒதுக்கீடு போன்ற சீர் திருத்த நடவடிக்கையால் இன்று பல தரப் பினரும் உயர்கல்வியை எட்ட முடிந்துள்ளது. ஆனாலும் மேல்நிலைக் கல்வி முடித்துவரும் மாணவர்களில் 60 சதவீதத்தினருக்கு கூட உயர்கல்வி கிடைப்பதில்லை.
கல்லூரிகளின் எண்ணிக்கையை பார்த்தால் நாடு முழுவதும் 30ஆயிரம் கல்லூரிகள் என்ற நிலைதான் உள்ளது. 600 பல்கலைக்கழகங்கள் இருந் தாலும் அது போதுமானதாக இல்லை. மேலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரி யர்கள் எண்ணிக்கை விகிதம் இல்லை. பல தனி யார் பள்ளிகளில் படிப்பு முடித்த மாணவர்களே ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாக நிய மிக்கப்படுகிறார்கள். வசதி படைத்தவர்களுக்கே உயர்கல்வி என்ற நிலையை போக்கி, அனைவருக்கும் உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மத்திய -மாநில அரசுகள் கல்விக்கு ஒதுக்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும்.
மேலும் பொறியியல் போன்ற தொழிற் படிப்பை முடித்தவர்க ளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்ற நிலையை மாற்ற கலை மற்றும் அறிவியல் படித்தவர்களுக் கும் வேலை கிடைக்க அவர்களின் திறனை மேம்படுத்த முயற்சிக்கவேண்டும். இதையெல் லாம் உயர் கல்வி மன்றம் செய்யுமா?

Leave A Reply

%d bloggers like this: