ஆரணி, மார்ச் 1-
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைத் தொடரில் காட்டு யானை களின் அட்டகாசம் தொடர் கதையாகிவருகிறது.கடந்த மாதம் கலசப் பாக்கம் அடுத்த மேல் சோழங்குப்பம் கிராமத்தில் விவசாயி ஆறுமுகம் (55), 14ம் தேதி போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன், 17ம் தேதி சந்தவாசல் பகு தியை சேர்ந்த மாஜி ராணுவ வீரர் ஏழுமலை (50) ஆகி யோரை யானைகள் மிதித்து கொன்றன.இந்நிலையில் நேற்று மாலை அமிர்தி வனப்பகுதி அருகே உள்ள ஓடைப் பகுதியில் யானைக்கூட்டம் சுற்றித்திரிந்து கொண்டி ருந்தன.
அப்போது அவ் வழியே வந்த வேடகொல்லை மேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி பச்சையப்பன் (50) என்பவரை யானைகள் வழி மறித்து தூக்கிவீசி மிதித்து கொன்றது.இந்நிலையில் புதனன்று (பிப். 29) மாலை அமிர்தி வனப்பகுதி அருகே உள்ள ஓடைப்பகுதியில் யானைக் கூட்டம் சுற்றித்திரிந்து கொண்டிருந்தன. அப் போது அவ்வழியே வந்த வேடகொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த விவ சாயி பச்சையப்பன் (50) என் பவரை யானைகள் வழி மறித்து தூக்கிவீசி மிதித்து கொன் றது.இதுகுறித்த தகவலின் பேரில், வேலூர் மாவட்ட வன பாதுகாவலர் மஞ்சு நாதா, அமிர்தி ரேஞ்சர் மாணிக்கம் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று பச்சையப்பன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப் பிவைத்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யானை கள் தாக்கியதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.மேலும், வியாழனன்று (மார்ச் 1) யானைக்கூட்டம் அமிர்தி அடுத்த கீழ்கல் பட்டு மலைகிராமத்திற்குள் புகுந்தன. அங்குள்ள ஒரு விவசாயியின் குடிசை வீடு மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்தியது.யானைகள் வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், முன்கூட்டியே வெளியேறி விட்டதால், அவர்கள் தப் பினர். இருப்பினும் வனத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானை களை விரட்டி வருகின்றனர். இப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: