சேலம், மார்ச்-1,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சார்பில் மேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம் அமைத்திட வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திசேலத்தில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுகவனம், பெருளாளர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குனரகம் உருவாக்கிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் ஆசிரியர்களை காலமுறை பணியாக வரையறுக்கப்பட்டு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பவானி, கல்பனா மற்றும் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கூடலூர்நீலகிரி மாவட்டம் கூடலூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.சந்திரசேகர் தலைமை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் ஆர்.டி.ஆனந்திகுமாரி, அமைப்புச் செயலாளர் சிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கியும். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வரவேற்றும் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி வர்கீஸ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சுனில்குமார், இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் வாழ்த்தி உரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: