சென்னை, மார்ச், 1 -சென்னை முகப்பேரி லுள்ள மெட்ராஸ் மெடிக் கல் மிஷன் மருத்துவமனை செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந் தம் என்ற பெயரில் அசல் சான்றிதழ்களை வைத்து கொண்டு ஒப்பந்தம் முடிந்த பின்பும் சான்றிதழ்களை திரும்பி தர மறுப்பதை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.அகில இந்திய தனியார் செவிலியர்கள் சங்கம் சார் பில் நடைபெற்ற இந்த போராட்டம் குறித்து சங் கத்தின் தலைவர் சரஸ்வதி கூறுகையில், “எங்களுக்கு மாத ஊதியம் 4,000 மட் டுமே வழங்கப்படுகிறது. எங்களுக்கு பணி நேரம் என்பது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணிநேரம் வேலை வாங் கப்படுகிறது. எனவே எங்க ளது பணி நேரத்தை முறைப் படுத்த வேண்டும், அடிமை களைப் போல் நடத்தப் படுவதை கைவிடவேண் டும். ஒப்பந்தம் என்ற பெய ரில் பெறப்படும் எங்களு டைய அசல் சான்றிதழ் களை ஒப்பந்தம் முடிந்த பின் பும் தர மறுக்கிறார்கள், அப்படி அசல் சான்றிதழ் பெற 50,000 ரூபாய் கேட் கிறார்கள் . வேறு எந்த மருத்துவமனையிலும் இது போன்ற ஒப்பந்த முறை இல்லை, இவ்வளவு குறைந்த ஊதியமும் இல்லை எனவே குறிப்பாக இந்த ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், ஊதி யத்தை உயர்த்தி வழங்க வேண்டும் இல்லையென் றால் தொடர் போராட்டத் தில் ஈடுபடுவோம் என்றார்.இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து தமிழக முதல்வருக்கும், தொழிலாளர் துறை ஆணை யத்திற்கும் புகார் அனுப்பி யுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: