திருவனந்தபுரம்: முல்லைப் பெரியா றில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு கடமைப்பட்டுள்ளது என்று ஆளுநர் பொறுப்பு வகிக்கும் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார். கேரள சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். தமிழகத்துடன் கேரள அரசு நல்ல உறவைப் பேணி வருகிறது.
இருப்பினும் தமிழகத்துக்கு தண்ணீர், கேரளத்துக்கு பாதுகாப்பு என்ற கொள்கையின் அடிப் படையில் புதிய அணை கட்ட கேரளம் கடமைப்பட்டுள்ளது என அவர் கூறினார்.கேரளாவில் ஆளுநராக இருந்த எம்.ஓ.எச் பரூக் ஜனவரியில் காலமானதை யடுத்து கர்நாடக ஆளுநரான பரத்வாஜ் கேரள ஆளுநர் பொறுப்பையும் கூடுத லாக கவனித்து வருகிறார். அதனால் கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரை தனது உரையுடன் அவர் தொடங்கி வைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: