புதுக்கோட்டை, மார்ச் 1-
தமிழக அரசு மேல் நிலைக் கல்விக்கென தனி இயக்குநரகம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி முதுநிலைப் பட்டதாரிகள் புதுக்கோட்டை முதன் மைக் கல்வி அலுவலர் அலு வலகம் முன்பு புதன்கிழமை யன்று மாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத் தினர்.மேலும், அரசாணை எண்: 72ல் உரிய திருத்தங் கள் செய்து முதுநிலை ஆசி ரியர்களுக்கு முறையான பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பள்ளி வேலை நாட்கள் 200 என உள்ள அரசாணைக்கு உட்பட்டு நாட்காட்டி வெளியிட வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் பள்ளி களில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிகளில் தகுதி மற்றும் திறன் என்ற வார்த்தைகளை நீக்க வேண் டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட் டத்தில் எழுப்பப்பட்டன.தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் அ. மணவாளன் ஆர்ப்பாட்டத் திற்கு தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொருளாளர் ஆர்.விஸ்வநாதன், மகளிர் அணிச்செயலாளர் எல். மணிமேகலை, துணைத் தலைவர்கள் ஏ.கணேசன், என்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் ஜெ.சுக தேவ், சி.சேதுராமன் உள் ளிட்டோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் கே.ஜெய பாலன், பொருளாளர் எம். ஜோஷி, முன்னாள் மாவட் டச் செயலாளர் கே.நாக ராஜன் உள்ளிட்டோர் பேசி னர்.

Leave A Reply

%d bloggers like this: