முசிறி வழக்கறிஞர்கள்நீதிமன்றப் புறக்கணிப்பு
முசிறி, மார்ச் 1-
முசிறி வழக்கறிஞர்கள் புதனன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட் டனர். துறையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாதன் என்பவரை துறையூர் காவல் உதவி ஆய்வாளர் சியாமலாதேவி தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளியதற்கு கண் டனம் தெரிவிக்கும் வகை யிலும், அவர் மீது உட னடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும், துறையூர் வழக் கறிஞர் சங்கத்தினர் கேட் டுக் கொண்டதற்கு இணங்க முசிறி வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடு பட்டனர். இதனால் நீதி மன்றத்தின் இயல்பு வேலைகள் பாதிக்கப்பட்டன.
ஸ்பாஸ்டிக் சொஸைட்டிஆண்டு விழா
முசிறி, மார்ச் 1-
முசிறி ஸ்பாஸ்டிக் சொஸைட்டியின் 26 வது ஆண்டு விழா, அக்ரஹா ரத்தில் உள்ள கிளை அலு வலகத்தில் நடைபெற்றது.சொஸைட்டியின் மேலாளர் சாந்தகுமார் தலைமை வகித்தார். முசிறி தொழிலதிபர் கோவர்த்த னம், பிளாட் ஸ்கூல் தலை மை ஆசிரியை பாலா ஆகி யோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டு ஸ்பாஸ்டிக் சொஸைட்டி யின் சேவைகளை பாராட்டி பேசினர். இந்த சொஸைட் டியில் பரா மரிக்கப்பட்டு வரும் 33 குழந்தைகளுக்கு பரிசுக ளையும் வழங்கினர். விழாவில் சொஸைட்டி யின் ஊழியர்கள் நவமணி, புஷ்பராணி, சபரிஅமல மேரி, சரோஜா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய அறிவியல் தினம்
முசிறி, மார்ச் 1-முசிறி பிளாட் தொடக்க பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஐந்தாம் வகுப்பு மாணவ – மாணவியர்க்கு அறிவியல் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பெற் றோர் – ஆசிரியர் கழகத் தலைவர் ராஜேஸ்வரி பரிசு வழங்கினார். கிராம கல்விக் குழுத் தலைவர் கவுன்சிலர் பாரதி செந்தில்குமார், தாளாளர் ஜார்ஜ்சக்கரவர்த்தி மற் றும் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் விழாவில் கலந்து கொண்டு, அறிவி யல் தினத்தின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.
கோயில் கொள்ளையர்கள் கைது
தூத்துக்குடி, மார்ச் 1 -குலசேகரன்பட்டணம் வீரகாளியம்மன் கோயி லில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோயில் ஜன்னல் கம்பியை உடைத்து கோயிலில் இருந்த மூலவர் சிலை, மற்றும் அம்மன் சிலை, மூலவருக்கு அணி விக்கும் வெள்ளி மார்பு பட்டை, கிரீடம், அரை சலங்கை, ஒட்டியானம் மற்றும் இரண்டுகிலோ வெள்ளி ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.இது குறித்து குலசேக ரன்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் கொள்ளை யர்கள் சிலைகளை கோவையில் விற்பனை செய்ய முயல்வதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொள் யைர்கள் சிலையை விற்க முயலும் போது போலீ சார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதில் ஆழ் வார்திருநகரியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்து ராமன்(32). திருப்பூர் மாவட் டம் அவினாசியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் ஆகி யோர் போலீசில் சிக்கினர்.

Leave A Reply

%d bloggers like this: