“ஏழைகள் இருக்கும் வரைஇலவசங்கள் தொடரும்”என்றார் முதல்வர்! “
ஏழைகள் எதுவரைஇருப்பார்கள்” என்றகேள்விக்கு,“மின்வெட்டு இருக்கும் வரை”!
மின்னலென பளிச்சிட்டதுபதில்!“மின்வெட்டு எதுவரை?என்ற கேள்விக்கு“ஆட்சியாளர்கள் இருக்கும்வரை”!
அம்பென வந்தது; அடுத்த பதில்!நான்கு மணி நேரமின்வெட்டென்றுநாக்கூசாமல்சொல்கின்றனர்!நகராட்சிகளிலோஎட்டுமணி நேரம்,கிராமங்களிலோபதினான்கு மணி நேரம்
!வடவேங்கடம் முதல்தென் குமரி வரைஎங்கு நோக்கினும்இருள், இருள்!
விட்டு விட்டுப் பெய்யும் மழை போலவிட்டு, விட்டுவருகிறது மின்சாரம்!
எப்போது வரும்?
எப்போது போகும்?
நத்தம் விசுவநாதனுக்கேவெளிச்சம்!
புயல் மழை அறிவிப்பிற்குரமணன் போலஇதற்கொரு மந்திரிஇருந்தால் தேவலை!
வீடுகளில் மிக்சி,கிரைண்டர்சப்தமுமில்லை,தொலைக்காட்சித் தொடர்களின்அழுகையுமில்லை!
காட்சிப் பொருளாகியிருந்தஅம்மியும், ஆட்டுக்கல்லும்அவசியப் பொருளாகிவிட்டன!இன்வெர்ட்டருக்கும்எமர்ஜென்சி லேம்ப்புக்கும்ஏகக்கிராக்கி!
எந்தக் கிராக்கியும்அற்றவர்கள்-இங்குஏழைகள் மட்டும் தான்!
பெஸ்ட்டிவெல் ஹாலிடேகலாச்சாரத்தைப் புரிய வைக்கிறது!
சம்மர் ஹாலிடேதட்பவெப்பத்தை அறிய வைக்கிறது!
பவர் ஹாலிடே-
உங்கள்தோல்வியை தெரிய வைக்கிறது!-
இரா.ஜோதிராம்

Leave a Reply

You must be logged in to post a comment.