சென்னை, மார்ச், 1 -மாற்றுத் திறனாளிக ளுக்கான வேலைவாய்ப்பு கள் தொடர்பாக தகவல் அளிக்கும் புதிய வலைத் தளம் தொடங்கப்பட்டுள் ளது.சென்னை லயோலா கல்லூரியில் மாற்றுத் திற னாளிகளுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டல் குறித்த இரண்டு நாள் பயி லரங்கம் வியாழனன்று (மார்ச் 1) தொடங்கியது. பல்கலைக்கழக நிதி மானிய குழுவுடன் இணைந்து இந்த பயிலரங்கை லயோலா கல் லூரியின் மாற்றுத் திறனா ளிகள் வளமையம் (ஆர்சி டிஏ) நடத்தியது. இந்த முகா மில் வேலை வாய்ப்பு தக வல்களுக்கான வலைத் தளம் தொடங்கப்பட்டுள் ளது.கல்லூரி முதல்வர் முனை வர் பீ.ஜெயராஜ் வலைத் தளத்தை தொடங்கி வைத் தார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழ கத்தின் பருவநிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் ஏ.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டார்.அமல் குழந்தைசாமி, ஜோ அருண், வினோத் பெஞ்சமின், பதிநாதன் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி களை பேராசிரியர் ஜே. அமிர்த்தலெனின் ஒருங்கி ணைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளி மாணவர்கள் கலந் துக் கொண்டனர்.

Leave A Reply