புதுச்சேரி,மார்ச் 1-
மாநில தேர்தல் ஆணை யரை ஒரு வாரத்திற்குள் நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.புதுச்சேரி உள்ளாட்சி பிரதிநிதிகளின் காலம் கடந்த ஆண்டு 2011 ஜூலை 13ஆம் தேதியுடன் முடிவடைந் தது. இந்நிலையில் உள் ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பிர தேச செயலாளர் வெ.பெரு மாள் 29.7.2011ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடுத்தார். அதன்பேரில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அ. ஸ்டாலின் ஆஜரானார். மாநில தேர்தல் ஆணை யரை நியமிக்க வேண்டும், வாக்காளர் பட்டியல் சரி பார்க்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப் பட்டது.
புதுச்சேரி அரசின் கோரிக்கை ஏற்று 6மாதத் திற்குள் (22.2.2012) உள் ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில் காலக்கெடு முடிய இரண்டு தினங்களுக்கு முன்பு இக்கால அவகா சத்தை நீடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட் டது.இந்த மனுமீதான விசா ரணை வியாழனன்று (மார்ச் 1) உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னிலையில் நடை பெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணை யரைகூட இது நாள்வரை நியமிக்காதது ஏன் என்று புதுச்சேரி அரசு வழக்கறி ஞரிடம் கேள்வி எழுப்பி னார்.
பிறகு ஒரு வாரத்திற் குள் தேர்தல் ஆணையரை நியமித்து விட்டு அதற்கான ஆணையை அடுத்த வாரம் வரும் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞருக்கு தலை மை நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார். மனுதாரர் சார் பில் வழக்கறிஞர் அ.ஸ்டா லின் ஆஜாரானார் என் பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: