கோவை, மார்ச் 1-
கோவை பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறை சார்பாக மருத்துவ தாவரங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு வியாழனன்று துவங்கியது.இதன் தொடக்கவிழாவிற்கு பல்கலைக்கழக பதிவாளர் திருமால்வளவன் தலைமை வகித்தார். கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழக வனத்துறை அலுவலர் பயிற்சி மைய இயக்குனர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இப்பயிற்சி முகாம் 16ந்தேதியன்று நிறைவுபெறுகிறது.

Leave A Reply