மதுரை, மார்ச் 1-
மதுரையில் புதனன்று 11 மணி நேரம் மின்சாரம் வெட்டப்பட்டது.புதனன்று இரவு மட் டும் 4 மணிநேரம் மின்சாரம் வெட்டப்பட்டது. வழக்கம் போல் பகலில் 6 மணி நேரம் வெட்டிய மின்சாரத்திற்கு, இரவில் போனசாக 4 மணி நேரம் வெட்டப்பட்டது. இதனால் 10, 12ம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களில் துவங்கி எல்கேஜி முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு எழுதும் பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வுக்கு படிக்கமுடியா மல், கொடுத்த பாடங்களை எழுத முடியாமல் தவித்தனர்.
இரவில் மாலை 6-7 மணி, 8.30-9 மணி, 10.30-11.30 மணி, 12.30-1.30 மணி, அதி காலை 3.00-4.00 மணி, 5.00-5.45 மணி என மின்சாரம் வெட்டப்பட்டது. இரவில் எந்த மின்வாரிய அதிகாரி யை தொடர்பு கொண்டு கேட்டாலும் சென்னையை கேளுங்கள், உயரதிகாரியை கேளுங்கள் என்றே பதில ளித்தனர்.வியாழனன்று காலை மின்வாரிய உயரதிகாரி களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, மத்திய அர சின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில் லை.
ஆந்திர மாநிலம் ரேணி குண்டாவில் மின்சார உற் பத்திக்கான ஜெனரேட்டர் பழுதாகிவிட்டது. பழுதான ஜெனரேட்டர் வியாழன் பிற்பகலுக்குள் சரியாகிவி டும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.இதற்கிடையில் கடும் மின்வெட்டைக் கண்டித்து சிறு உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: