கோவை, மார்ச். 1-
கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.கோவை வழியாக கேரளாவிற்கு லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாவட்ட எல்லை பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வேளந்தாவளம் சோதனை சாவடி வழியாக 2 லாரிகள் வந்தன. அப்போது அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார் லாரியை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் தப்பி ஓடினர். அவர்களை பின்தொடர்ந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கரூரில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி கேரளாவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, லாரியுடன் மணலை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply