——————————-
அரசியல் தத்துவப் போராட்டம் தேவை
——————————–
25.2.12 தீக்கதிரில், “பின் நவீனத்து வத்தின் அரசியல்” எனும் தலைப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை யின் பேட்டி (சந்திப்பு: எஸ்.பி.ராஜேந் திரன்), ஒரு முற்போக்குத் தமிழ் எழுத் தாளன் எனும் முறையிலும், மார்க்சியத் தத்துவார்த்தப் பிரச்சனையில் நீண்ட நெடுங்காலமாக ஆர்வமும், அக்கறை யும் செலுத்தி வரும் இதழியலாளன் எனும் வகையிலும், என்னை மிகவும் ஈர்த்தது; வருகிற ஏப்ரலில் கோழிக்கோட் டில் நிகழவிருக்கும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது அகில இந்திய மாநாட்டில், “பின் நவீனத்து வத்தின் அரசியல்” உள்ளிட்ட சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீது, கட் சியின் நிலைபாடு குறித்து, விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது, இன்றைய இந்திய, தமிழகச் சூழ்நிலை யில், இந்தியாவில் புரட்சிகர மாற்றங் களை விழையும் அனைவராலும் பெரி தும் வரவேற்கத்தக்கதாகும்; பாராட்டத் தக்க பணியாகும்.காலமெல்லாம் அடக்கி ஒடுக்கப் பட்டு, அல்லல் உறும் மக்கள் பிரிவுகள், இடதுசாரிகளின் பின்னால் அணி திரண்டுவிடக் கூடாது எனும் தீய நோக்குடன் அரசியல், பொருளா தாரம், சமுதாயம், கல்வி, கலாச்சாரத் துறைகளில்- குறிப்பாக ஊடகத்துறை யில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தளங்களில், பின் நவீனத்துவ சக்திகள், செய்துவரும் சீர்குலைவு வேலைகளுக்கு எதிரான ஒன்றுபட்ட, வீறுமிக்க அரசியல் தத்துவப் போராட் டம் இன்று மிக அவசியம்.-
தி.க.சி., நெல்லை- 6
——————————–
மக்களிடம்எடுத்துச் செல்வோம்
——————————–
26.2.12 தீக்கதிரில், “தமிழை ஆட்சி மொழியாக்க சிபிஎம் மாநாடு வேண்டு கோள்” என்ற செய்தியைப் படித்தேன்.நாங்கள்தான் தமிழர்களின் காவலர் கள், உலகத் தமிழர்களின் ஒரே தலை வன், இத்தனையாவது முறை முதல்வர் என்று பெருமையடிப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் கூட தமிழை ஆட்சிமொழியாக்கவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.தனக்கு உதவிய கருவிகளுக்கு ஆயுதபூஜை என்று எளிய மக்கள் நன்றி செலுத்துகிறார்கள். விவசாயத் திற்கு உதவிய கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்து கிறார்கள்.ஆனால், அதுபோன்ற நன்றியறி தல் கூட, தமிழை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், ஆதாயம் அடைந்தவர் களுக்கு இல்லையே என்றுதான் கேட் கத் தோன்றுகிறது.அதே சமயம் பி.ராமமூர்த்தி, ஜீவா, ஏ.நல்லசிவன் உள்ளிட்ட பொதுவு டைமை இயக்கத் தலைவர்களும், தமுஎகச போன்ற இலக்கிய அமைப் புக்களும் தமிழுக்கு ஆற்றிய பங்க ளிப்பை மக்களிடம் தொடர்ந்து எடுத் துச் செல்ல வேண்டும்.-
எஸ்.கே.சாமி, போரூர்- 116
——————————–
“புகழ்”நிலைத்தது“
——————————–
கோலி புயலில் இலங்கை பறந் தது” என்ற செய்தி பார்த்தேன்.வழக்கமாக இந்திய அணியின் சில வீரர்கள், நான்கு ஆட்டங்களில் நன்றாக ஆட மாட்டார்கள். ஐந்தாவது ஆட்டத்தில் சதமடித்து, அடுத்த தொட ருக்கு சீட் பிடித்துக் கொள்வார்கள். ஊடகங்களும் அவர்கள் அடித்த சதத்தையே, அடுத்த தொடர் வரை ஊதிப் பெரிதாக்குவார்கள்.அதுபோன்றுதான், இப்போது தொடர் தோல்விகளை அடைந்து வந்த இந்திய அணி, இலங்கையை வென்று, தனது “புகழை” நிலை நிறுத் திக் கொண்டு விட்டது
.- க.விஜி விநோத், ஈரோடு
——————————–
பற்றாக்குறை யாருக்கு?
——————————–
15.2.12 தீக்கதிரில், நமது நாட்டின் தொழிற்துறை வளர்ச்சிக்கு திறன் வாய்ந்த இளைஞர்கள் பற்றாக்குறை உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள் ளதைப் படித்தேன்.இதைபற்றி பில்கேட்ஸிடம் கேட் டால், “இந்தியாவில்தான், அதிலும் தென்பகுதியில் அறிவுத்திறன் வாய்ந்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர்; எனது நிறுவனங்களை, அமெரிக் காவை விட்டால், இந்தியாவில்தான் நடத்துவேன்” என்பார். அந்த அள விற்கு இந்திய இளைஞர்களின் ஆற்ற லைப் புரிந்து கொண்ட, அந்நிய நாட்டு நிறுவனங்கள் எல்லாம் இந்தியா வர துடித்துக் கொண்டிருக்கின்றன.ஊழலைக் கட்டுப்படுத்த முடியாத பிரதமரால், இந்திய இளைஞர்களின் முழுதிறமையை உணர்ந்து கொள்ள முடியாதுதான்.- சி.ராஜகுமார், ராஜபாளையம்

Leave A Reply

%d bloggers like this: