கொல்கத்தா, மார்ச் 1- போக்குவரத்து விதி களை மீறியதைக் கேட்ட தால் போக்குவரத்துக் காவ லரை தாக்கிய, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர் ஜியின் அண்ணன் மகன் ஆகாஷ் பானர்ஜி மற்றும் 3 பேரை காவலர்கள் கைது செய்தனர். மம்தா உத்தரவுப் படி, அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை காலை 11 மணிக்கு போக்குவரத்துக் காவலரை தாக்கிய நிகழ்வு ஏற்பட்டது. 1-1/2 மணி நேரத்திற்குப்பின்னர் ஆகாஷ் பானர்ஜி மற்றும் 3 பேர் கைதாகினர்.தாக்கப்பட்ட போக்குவரத்து காவலர் தகவல்படி, ஆகாஷ் பானர்ஜி கார், விதிமுறைகளை மீறி தவறான சந்து வழியாக பாய்ந்துசென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், காரை சாலையைவிட்டு, நகர்த்தி சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றபோது, தாக்குதல் நடந்தது எனத் தெரிவித்தார். முதல்வரின் அண்ணன் மகன் என்ற தகவல் தெரிந்தவுடன் ஆகாஷ் பானர்ஜி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் விடுதலை ஆனதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை உணர்ந்த மம்தா ஆகாஷை மீண்டும் கைது செய்யும்படி கூறினார். மம்தா உறவினர் காவலரைத் தாக்கியதால் அந்த இடத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. அந்தப்போராட்டமும் ஆகாஷ் பானர்ஜியின் காரும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின.

Leave A Reply

%d bloggers like this: