மும்பை, மார்ச் 1-
இந்தியாவின் மகத்தான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எண்ணெய் மற் றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓஎன் ஜிசி) 5 சதவீதப் பங்குகளை மன்மோகன் சிங் அரசு வியாழனன்று ஏலம்விட்டது. இந்த ஏலத்தில் வியாழக்கிழமை 29.22 கோடிப்பங்குகளை விற்று ரூ.8500 கோடி ‘வருவாயை’ பெற்றது. இந்தப்பங்கு கள் விற்பனையில் ரூ.12 ஆயிரம் கோடிக்கு ‘வருவாய்’ பெறலாம் என திட்டமிட்ட மத்திய அரசின் மதிப்பீட்டில் 3ல் 2 பங்கு அளவு வரு வாயே கிடைத்துள்ளது. ஒருநாள் ஏல முடி வில் 29.22 கோடி பங்குகள் விற்பனை ஆகின. தேசியப் பங்குச்சந்தையில் (என்எஸ்இ) 19.92 கோடிப் பங்குகளும் மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) 9.3 கோடி பங்குகளும் விற்பனை ஆகின.மத்திய அரசு, ஒரு பங்கு ரூ.290 என்ற அடிப்படை விலையில் 42.77 கோடி பங்கு களை விற்க உத்தேசித்து இருந்தது.
மொத்த ஏல விற்பனைத்தொகை ரூ. 8500 கோடி கிடைத்தது. விலை முன்னுரிமை அடிப்படையில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. இதன்படி பங்குகளை அதிக விலைக்கு கேட்ட நபர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.290-ரூ.293 என்ற விலை அடிப்படையில் பங்குகள் விற் பனை ஆகின. இந்த ஒருநாள் பங்குகள் விற்பனையில் ரூ.12 ஆயிரம் கோடி முதல் ரூ.13 ஆயிரம் கோடி வரை நிதி திரட்ட அரசு திட்டமிட்டு இருந்தது.ஏலம் துவங்கிய ஒரு மணி நேரத்தில் 37 ஆயிரம் பங்குகள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தன. மதியம் 3 மணி வரை 1.43 கோடி பங்குகளை விலைக்கு வாங்க ஏலம் கேட்டனர். மும்பை பங்குச்சந்தையில் இறுதியாக 1.87 சதவீதம் குறைவாக ஒரு பங்கு ரூ.287.85 என்ற அளவுக்கு கீழ் இறங்கியது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஓஎன்ஜிசியின் 5 சத வீதப் பங்குகளை விற்க அரசு முடிவு செய்தது.ஓ.என்.ஜி.சியின் 74.14 சதவீதப் பங்கு கள் மத்திய அரசிடம் உள்ளன. அதில் 5 சதவீதத்தை அதாவது 42.77 கோடி பங்கு களை விற்க அரசு முடிவு எடுத்தது.

Leave A Reply

%d bloggers like this: