கொல்கத்தா, மார்ச் 1- அந்நிய நாடுவாழ் இந்தி யர்கள் அனுரூப், சகரிகா பட்டாச்சார்யா தம்பதியர் ஸ்டேவங்கர் மாவட்ட நீதி மன்ற உத்தரவுக்காகக் காத் திருக்கின்றனர். நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் குழந்தை கள் தங்களிடம் வந்துவிடும் என்று அவர்கள் எண்ணு கின்றனர்.குழந்தைகள் தனி படுக் கைகள் கொண்ட தனி அறைகளில் வளர்க்கப்பட வில்லை. சுதந்திரமின்றி கட் டுப்பாட்டுடன் வளர்க்கப் பட்டதாகக் குற்றம்சாட்டி நார்வே குழந்தை நல சேவை, குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பறித்துச் சென்றது. கடந்த 11 மாதங்களாகக் குழந்தை களை நார்வே அரசு பரா மரித்து வருகிறது.இப்பிரச்சனையில் தொடக்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப் பினர் பிருந்தா காரத் தலை யிட்டு வருகிறார். இந்திய வெளியுறவுத்துறையையும் அமைச்சரையும் குழந்தை களை இந்தியாவுக்கு கொண்டு வருவது பற்றி நெருக்கி வருகிறார். அவரு டைய முயற்சியின் பலனாக அபிக்யான் (1), ஐஸ்வர்யா (3) ஆகிய இரு குழந்தை களும் அனுரூப்பின் சகோத ரர் அருணபாஷ் பட்டாச் சார்யாவிடம் ஒப்படைக்க ஸ்டேவங்கர் நகராட்சி இசைந்துள்ளது.இதற்கிடையில் குழந் தைகள் பிரச்சனை நீதிமன் றத்தில் உள்ளதால் குழந்தை கள் ஒப்படைப்பு தாமதமா கிறது. மார்ச் 23 அன்று நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்கவுள்ளது. குழந்தை கள் பெற்றோருடன் சேரும் நல்லதொரு முடிவு கிட்டு மென நம்புவதாக சகரிகா பட்டாச்சார்யா ‘இந்து’ நாளிதழிடம் தொலை பேசியில் கூறியுள்ளார்.கடந்த 11 மாதங்களாக குழந்தைகளை மீட்க நார்வே அரசுடன் போராடி வருகிறோம். நாங்கள் குற்ற வாளிகள் அல்ல என் பதை யாரும் புரிந்துகொள்ளவில் லை. தவறு எங்களிடம்தான் உள்ளது என்பது போன்ற தோற்றத்தை நார்வே அதி காரிகள் உருவாக்கிவிட் டனர் என்றும் அவர் கூறு கிறார்.பெற்றோரிடம் விளக் கம் கேட்க நார்வே குழந் தைகள் நல சேவை தவறி விட்டது. பெற்றோருக்கு அறிவிப்பு தராமல் அபிக் யானை மழலையர் பள்ளி யில் இருந்தும் ஐஸ்வர்யா வை வீட்டில் இருந்தும் அது அபகரித்துச் சென்று விட்டது.பெற்றோர், நார்வே நீதி மன்றம் சென்றனர். கலாச் சார இடைவெளியைப் புரிந்துகொள்ளாமல் நார்வே அரசும் நீதிமன்ற மும் குழந்தைகளை பராம ரிப்பு இல்லத்தில் ஒப்ப டைத்தன. இந்திய அரசு தலையிட்டபின் குழந்தை கள் பெற்றோருடன் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. குழந்தைகளை இந்தியா கொண்டு வருவதற்காக முயற்சி செய்து வரும் அனைவருக்கும் சகரிகா பட்டாச்சார்யா நன்றி கூறி னார்.

Leave a Reply

You must be logged in to post a comment.