சென்னை, மார்ச், 1 –
மிகவும் புரதச்சத்து மிக்க பருப்பு வகைகளை டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கோவையில் நடைபெற்ற மாணவர்கள் கலைவிழாவில் டாடா ஐ சக்தி தால் அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 10ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட இந்த இசை, நாட்டியம், நாடக விழாவில் டாடா பருப்பை விளக்கும் பொம்மை மாணவர்களிடம் புரதச்சத்து குறித்து கலந்து ரையாடியது. தோல் பாலிஷ் செய்யப்படாத பருப்பு நமது உடலுக்கு அதிக சக்தியை அளிக்கிறது என்பதையும் நாள்தோறும் உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வதால் நமக்கு தேவையான புரதச்சத்து கிடைப் பதையும் அந்த பொம்மை விளக்கியது. இந்தியர்களின் அனைத்து உணவிலும் பருப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எனவே அதன் பயனை அறியும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நுகர்வோர் தயா ரிப்பு வணிக தலைமை செயல் அதிகாரி அஸ்வின் ஹிரன் கூறினார். தற்போது டாடா ஐ சக்தி தால் இந்தியாவில் தமிழ்நாடு உள்பட 18 மாவட்டங்களில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிஹாட் ஏர்வேசின் அதிரடி திட்டம்
சென்னை, மார்ச், 1 –
எதிஹாட் ஏர்வேஸ் பயண முகவர்களுக்கான புதிய ஊக்கப்பரிசு திட்டத்தினை அறிவித்துள்ளது.இதன் படி ஒரு பயண முகவரின் ஒரு வருடத்திற்கான அனைத்து செலவுகளையும் (வாடகை, போக்குவரத்து, காய்கறி மற்றும் இதர செலவுகள்) எதிஹாட் ஏர்வேஸ் ஏற்கும். இந்த திட்டத்தில் சேருவதற்கு முகவர்கள் தங் களை நிறுவனத்தின் இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.அதன் பிறகு அவர்கள் ஒரு மாதம் எதிஹாட் ஏர்வேசில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதை பொறுத்து புள்ளிகள் வழங்கப்படும்.போட்டியில் கலந்துகொண்டவர்களின் பட்டியலிலி ருந்து ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார். சிறப்பு பரிசாக அவரின் ஒரு வருடத்திற்கான அனைத்து செலவுகளையும் எதிஹாட் ஏர்வேஸ் ஏற்றுக் கொள்கிறது.
ஐடியா புதிய சலுகை
சென்னை, மார்ச், 1 –
செல்பேசியில் பேசுவதற்கு காசு இல்லை என்றால் முக்கியமான அழைப்புகள் கூட இடையிலேயே துண் டிக்கப்படும். இந்த சூழ்நிலையை பலர் அனுபவித்திருப் பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஐடியா ப்ரீபெய்டு சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவசரகால டாக் டைமை பெறலாம். இந்தச் சலுகை ரூ.1க்கும் குறைவாக பேலன்ஸ் உள்ள 90 நாட்களுக்கு மேல் ஐடியா நெட்ஒர்க்கில் இருக்கும் ஐடியா ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கு மட்டும் கிடைக்கும். ஐடியா சந்தா தாரர்கள் தங்களது ஐடியா போனில் இருந்து ஐவிஆர் எஸ் 53535 அழைப்பதன் மூலம் இந்த சலுகையை பெறலாம் என்று ஐடியா தமிழ்நாடு வட்டாரத் தலைவர் எம். ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: