புதுச்சேரி,மார்ச். 1-
புதுச்சேரி மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்று வதை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக்குழு கூட்டம் பிர தேச தலைவர் நிலவழகன் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் பிர தேச செயலாளர் பத்மநா பன், பொருளாளர் நாகப் பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை மசோதா 2003 அடிப்படையில் அரசின் மின்துறையை கார்ப்பரேஷ னாக மாற்றும் முயற்சியை புதுச்சேரி அரசு முற்றிலு மாக கைவிட வேண்டும்.
மின்துறையை கார்ப்பரேஷ னாக மாற்றினால் மின்கட் டணம் கடுமையாக உயரும். விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் கைவிடப் படும். இதனால் அடிப்படை உணவு உற்பத்தி செய்வதில் விவசாயிகள் கூடுதலான நஷ்டமடைவார்கள். ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ஒரு விளக்கு வசதியும் கைவி டப்படும். மேலும் ஊழியர்களின் பென்சன் கேள்விக்குறியாக் கப்படும். எனவே புதுச்சேரி மின்துறையை கார்ப்பரேஷ னாக மாற்றும் முயற்சியை முற்றிலுமாக கைவிட வேண் டும் என கேட்டுகொள்வ தோடு மார்ச் மாதம் 3வது வாரத்தில் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத் தப்படும்.
மேலும் தண் ணீரை மத்திய அரசு சேவை என்று பார்க்காமல் விற் பனை பொருளாக மாற்ற முயற்சிக்கிறது. எனவே இதனை எதிர்த்து அனைத்து பகுதி மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கருத்த ரங்கம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.