தஞ்சாவூர், மார்ச் 1 –
நீதிமன்ற தீர்ப்பை மதிக் காமல் மக்கள்நலப் பணி யாளர்களுக்கு பணிவழங்க மறுத்துவரும் தமிழக அர சைக் கண்டித்து அரசு ஆணை நகல் எரிப்பு போராட்டம் நடை பெற்றது.தஞ்சையில் புகைவண்டி நிலையம் முன்பு நடை பெற்ற இப்போராட்டத்தில் 38 பணி யாளர்கள் பங்கேற்று கைதாகினர்.இவர்களுக்கு ஆதரவாக வந்த தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க நிர்வாகிகள் – மாவட்டத் தலைவர் வி. கோபால்சாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.பன் னீர்செல்வம், துணைத் தலை வர் எஸ்.கோதண்டபாணி, வடக்கு வட்டப் பொருளாளர் திரவியராஜ் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.மக்கள் நலப்பணியாளர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் சிவசங்கரன், மாவட்ட துணைத் தலைவர் சாந்தி மல்லி, மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், ரவிச்சந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட 38 பேரையும் கிழக்கு சரக காவல் துறையினர் கைது செய்தனர். இச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவசங்கரன் செய்தி யாளர்களிடம் கூறும்போது, மாநில அரசு, எங்களுக்கு மீண் டும் பணி வழங்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடு வோம் என்று தெரிவித்தார்.புதுக்கோட்டை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன் பாக மக்கள் நலப் பணியா ளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட நூற் றுக்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.போராட்டத்திற்குத் தமிழ் நாடு மக்கள்நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர்கள் வ.பெரியசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ். பழனிவேல், அ.சித்ரா, கருப் பையா, ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆர். குழந்தைவேலு பேசினார்.போராட்டத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் நலப்பணி யாளர்கள் கலந்து கொண்டு பணிநீக்க உத்தரவு நகலை எரித்து முழக்கமிட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நலப்பணி யாளர்களை அராஜகமான முறையில் போலீசார் அடித்து இழுத்து வேனுக்குள் தள்ளி னர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நலப்பணியாளர்கள் சாலையில் அமர்ந்து, ‘போலீஸ் அராஜகம் ஒழிக’ என முழக்கமிட்டனர். இப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணி யாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply