ஆலப்புழா, மார்ச் 1- ஆலப்புழா கடல் பகுதி யில் அடையாளம் காணப் படாத கப்பல் மீனவர்கள் படகில் மோதி விபத்து ஏற்பட்டதில் 2 கேரள மீனவர்கள் உயிரிழந்தனர்; 3 மீனவர்களைக் காணவில் லை. வியாழக்கிழமை அதி காலை இந்த துயர நிகழ்வு ஏற்பட்டது.விபத்தில் சிக்கிய படகில் இருந்து 2 மீனவர்களை இதரப் படகுகளில் இருந்த வர்கள் காப்பாற்றினர். நீந்த கறா மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, 7 மீனவர்களுடன் ட்வான்-2 என்ற படகுமீன் பிடிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை புறப் பட்ட போது, அடையா ளம் தெரியாத கப்பல் மோதியது. கப்பற்படை, கடலோரக் காவல்படை ஆகியவை விபத்து நடந்த இடத்தில் தேடுதல் வேட் டையை மேற்கொண்டனர். விபத்து எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய ஆய்வு நடந்தது என ஆலப் புழா மாவட்ட ஆட்சித் தலைவர் சௌரவ் ஜெயின் கூறினார். கொல்லம் மாவட் டத்தைச்சேர்ந்த மீனவர்கள் பிரான்சிஸ் ஜஸ்டின் மற் றும் சேவியர் ஆவர். மீட்கப்பட்ட மீனவர்கள் ஆலப்புழா மாவட்ட மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பிப்ரவரி மாதம் 15ம் தேதி கொச்சி கடல் பகுதி யில் 2 மீனவர்களை, இத் தாலி கப்பல் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக்கொன்ற தைத் தொடர்ந்து இந்த துயர நிகழ்வு நடந்துள்ளது.கடுமையான, இருட்டில் நள்ளிரவு 1 மணிக்கு படகு மீது கப்பல் மோதியது என, உயிர் தப்பிய மீனவர் மைக்கேல் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: