கோவை, மார்ச். 1-
பஞ்சாலைகளில் உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான தொழில்நுட்பங்களை வழங்கக் கூடிய பொருட்காட்சிக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.கோவை கொடீசியா தொழிற்காட்சி அரங்கில் மார்ச்-2ம் தேதி (இன்று) இக்கண்காட்சி துவங்குகிறது. இதில் டெக்ஸ் பேர் 2012 குறித்து கண்காட்சி தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவதுஜவுளி ஆலைகள் ஆண்டுதோறும் உதிரிபாகங்கள் வாங்குவதற்கு 2.5 சதவிகிதம், ஜவுளி இயந்திரங்கள் புதுப்பிப்பதற்கு 4 முதல் 6 சதவிகிதமும் செலவழிக்கின்றன. இதற்கான இயந்திரங்கள் உதிரிபாகங்கள் வாங்குவதற்கும் இக்கண்காட்சி பயன்படும். உற்பத்தி செலவினங்களை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய பஞ்சாலைகள் உள்ளன. அதிக செலவீனத்தை பொருத்தவரை மின்சாரமே முக்கிய இடத்தை பிடிக்கிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள் இக்காண்காட்சியில் முக்கிய இடம் பிடிக்கும். கொச்சியில் இருந்து கோவை வழியாக மங்களூர் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு செல்லம் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி பஞ்சாலைகளுக்கான மின்சாரத்தை தயாரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இது டீசல் மூலம் மின்சாரம் தயாரிப்பதைவிட உற்பத்தி செலவு குறைவு. அனைத்து வகையிலும் செலவினங்களை குறைத்து உற்பத்தியை அதிகரிப்பதற்கு இக்கண் காட்சி பயன்படும். பஞ்சாலை அதிபர்கள் முதல் இயந்திர பிட்டர்கள், நெசவாளர்கள் என 50 ஆயிரம் பேர் இக்கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: