கொல்கத்தா, மார்ச் 1-
மேற்கு வங்கத்தில் அதி கரித்து வரும் அரசியல் வன் முறைகள், குற்றங்கள் குறிப்பாக பூங்காத் தெரு பாலியல் வன் புணர்ச்சி வழக்கு உள்பட மாநி லத்தின் நிலவரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி யின் தீவிர ஆதரவாளரும் பாடக ருமான திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் சுமன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.
முன்னாள் பத்திரிகையாள ரும் நிகரகுவாவில் நடந்த சாண் டினிஸ்டா எழுச்சியை விரி வாகத் தொகுத்து வழங்கியவரும், சாண்டினிஸ்டா போராட்டக் காரர்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டவருமான கபீர் சுமன், 1990களில் வங்காள இசையில் புரட்சியை ஏற்படுத்தினார் என் றால் அது மிகையல்ல.‘விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. பல அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங் கப்படவில்லை. திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அமைப்பு வன்முறைப் பாதையிலும் பலப் பிரயோகத்திலும் போய்க் கொண்டிருக்கிறது.
பாலியல் குற்றங்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது’’ என்று கபீர் சுமன் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன் றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள கபீர், மம்தா பானர்ஜி யின் ஆட்சியில் அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
பூங்காத் தெருவில் நடை பெற்ற பாலியல் வன்புணர்ச்சி சம்பவம் குறித்து பெரும்பாலான மக்கள் தங்களது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளனர். ஆனால் இவற்றில் வியப்பளிக்கும் சம்ப வம் என்னவென்றால், முன்ன தாக பாலியல் குற்றங்கள் எங்கு நடைபெற்றாலும் அங்கெல் லாம் சென்று ஆறுதல் தெரி வித்த மம்தா பானர்ஜி, பூங்காத் தெருவில் நடைபெற்ற குற்றத் தை ஒட்டுமொத்தமாக மறுப் பது தான் என்று கபீர் சுமன் தனது வலைத்தளத்தில் குறிப் பிட்டுள்ளார்.மேலும், பர்துவான் மாவட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரதீப் தா கொலை உள்பட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சித் தலைவர்கள் மீதான தாக்கு தல்கள் குறித்தும் அவர் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாக்குதல்கள் குறித்து முக்கிய எதிர்க்கட்சியான இடது முன்னணி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ள நிலையிலும், இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்கட்சி சண்டை என்று மம்தா பானர்ஜி குற்றச் சாட்டுகளைப் புறக்கணித்து வருகிறார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இக் கொலைகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர், இது உள்கட்சித் தக ராறு என்று பதிலளித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. அதன் காரணமாக அவர்கள் இறப்பது இயல்பான செயல் என்ற தொனி யில் முதல்வர் மம்தா பானர்ஜி பதில் தெரிவித்துள்ளார்.
தற்போது மம்தா பானர்ஜி யின் பாட்டுக்கு ஆட்டம் போடும் அறிவுஜீவிகள் கூட்டம், முன்பு நந்திகிராமம் மற்றும் சிங் கூர் பிரச்சனைகளின் போது மம்தா பானர்ஜியை எதிர்த்தவர்களே என்று சுமன் தனது வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.