சேலம், மார்ச்-1,
சேலத்தில் உள்ள மனமகிழ் மன்றம் மற்றும் இரவு நேர விடுதிகள் (கிளப்) உள்ளிட்டவற்றில் சூதாட்டம் நடைபெறுவதாக மாநகர காவல்துறை ஆணையாளர் மஹாலிக்கு புகார் கிடைக்கப் பெற்றது. இதனையடுத்து, அவரது உத்தரவின் பேரில் கூடுதல் காவல்துறை ஆணையாளர் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சேலம் போர்லாண்ட்ஸில் உள்ள மனமகிழ் மன்றத்தில் 29 பேர், அன்னதானப்பட்டி பகுதியில் 13 மற்றும் பல்வேறு பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 53 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் பிரபல தொழிலாதிபர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். இந்த திடீர் சோதனை சூதாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply