கோவை,மார்ச்.1-
கோவை வெள்ளக்கிணறு பேரூராட்சியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) முன்னாள் தலைவரும், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தின் சிபிஐ முன்னாள் செயலாளருமான தோழர் எம்.சின்னையன்(87) வியாழனன்று காலமானார்.தோழர் எம்.சின்னையன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரான சி.சிவசாமி அவர்களின் தந்தை ஆவார். வியாழனன்று வெள்ளக்கிணறில் உள்ள மயானத்தில் தோழர் சின்னையனின் இறுதி நிகழ்ச்சியும், இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. அவருக்கு மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி, கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, கே.சி.கருணாகரன், சி.பத்மநாபன் உள்ளிட்டோரும் சிஐடியு கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜி.சுப்பையன், பொருளாளர் ஜெயராஜ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகம் ஆகியோர் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.ஜி.ஜெகநாதன், கே.புருஷோத்தமன், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் பி.மௌனசாமி, கல்யாணசுந்தரம் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: