கோவை, மார்ச். 1-
தொற்றுநோய்கள் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவர்களுக்கு மருத்துவத்துறையின் சமீபத்திய முன்னேற்றம் மற்றும் மேம்பாடுகுறித்து போதித்து அவர்களை திறன் மிக்கவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவரும் சுனோஃபி அமைப்பின் சார்பில் பிரயாஸ் என்ற தொற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்.பாலமுருகன், எஸ்.சேரலாதன், ஜாக்குலின், எஸ். நாகராஜன் உள்ளிட்டமருத்துவர்கள் பங்கேற்றனர்.இவ்வமைப்பின் அசோசியேட் டைரக்டர் மருத்துவர் வி.ராஜ்ராஜ் தயக்ஷா தெரிவிக்கையில்: சாதார நோய்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு கல்வியறிவு ஊட்ட வேண்டியது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஏனென்றால் தொற்றுநோய்களான மலேரியா, டெங்கு, சிக்கன்பாக்ஸ் மற்றும் காலராபோன்று அதிகம் குணப்படுத்தக் கூடிய இந்த நோய்களால் நம்நாட்டில் அதிக அளவில் மக்கள் இறக்கிறார்கள். தமிழ்நாட்டில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் கோவையில் இந்த நிகழ்ச்சியை நடந்த முடிவு செய்தோம் என்றார்.பொதுவாக காணப் படுவது காய்ச்சல் வகை மலேரியா என்றாலும் கிராமப்புற மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு அதிகம் மரணமடைகின்றனர். சுகாதாரக்கேடு நிறைந்த கிராமப்புற சூழ்நிலையில், பகலில் அதிகம் கடிக்கும் ஒருவித கொசுவால் உருவாகிறது இந்நோய் என்று மருத்துவர் ஆர்.பாலமுருகன் தெரிவித்தனர். ஒருவித கொசுவால் வைரஸ் கிரிமியால் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை மருந்துகளும் சரியான கண்டுபிடிப்பு முறைகளும் இல்லையென்பது கவலையளிக்க கூடிய விசயமாகும். தேக்கிவைக்கப்படும் நீரிலிருந்து இதற்கான கொசுக்கள் உருவாவதாகவும், குறிப்பாக குடிநீர் தட்டுப்பாட்டில் மக்கள் தங்கள் வீடுகளில் அனைத்து பாத்திரங்களிலும் தண்ணீர் பிடித்து மூடிவைக்காமல் நீண்ட நாட்களுக்களுக்கு விட்டு விடுகின்றனர் என்றார் மருத்துவர் எஸ்.சேரலாதன். காற்றில் பரவக்கூடிய சிக்கன் பாக்ஸ் நோய் குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. தலைவலி, அதிக காய்ச்சல், வயிற்றுவலி, பசியின்மை ஆகிய அறிகுறிகள் முதலில் தோன்றி நான்கு நாட்களில் உடலில் கொப்புளங்கள் தோன்றுவது இந்த நோயின் தன்மையாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டு மொத்த மக்களுக்கும் விரைந்து பரவக்கூடிய இந்த நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாதது கவலையளிப்பதாக மருத்துவர் ஜாக்குலின் தெரிவித்தார். இந்தியாவில் மூன்றில் 2 பங்கு உள்ள பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்படாத குடிநீர் மூலம் உருவாகும் பாக்டீரியம் விப்ரியோ கலாரா என்ற கிருமியால் தமிழ்நாட்டில் அடிக்கடி காலரா நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கான சிறந்த வழி குடிநீரை காய்ச்சி குடிப்பதுதான் என்றார் மருத்துவர் எஸ்.நாகராஜன்.

Leave a Reply

You must be logged in to post a comment.