புதுக்கோட்டை, மார்ச்1
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் புதுக்கோட் டை ஜே.சி.ஐ சங்கமும் இணைந்து தேசிய அறிவி யல் தின கருத்தரங்கை அண்மையில் நடத்தின.கருத்தரங்கிற்கு அறி வியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். “தேசிய அறிவி யல் தின வரலாறு” என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் எஸ்.டி.பாலகிருஷ் ணன், “ராமன் விளைவு” என்ற தலைப்பில் மாவட் டச் செயலாளர் கா.ஜெய பாலன் ஆகியோர் உரையாற் றினர். கருத்தரங்கையொட்டி மாணவ, மாணவியர்க்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர் அடைக்கண் பரிசுக ளை வழங்கி பாராட்டினார்.முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டப் பொரு ளாளர் எம்.வீரமுத்து வர வேற்றார். ஜே.சி.ஐ. சங்க மாவட்டப் பொருளாளர் முருகதாஸ் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: