ஓசூர் நகராட்சி தேன் கனிக்கோட்டை சாலை யில், சாராட்சியர் குடியிருப் பை ஒட்டி காந்திநகருக்கும் நேரு நகருக்கும் இடையில் உள் ளதுதான் இந்த அருந்த தியர் காலனி.2008 மார்ச் மாதம் 2 சென்ட் வீதம் 40 மனைகள் அருந்ததியர் குடும்பங்க ளுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டது. மேற் கிலும், வடக்கிலும் தனியார் நிலம் அதை அடுத்து ரயில்வே நிலமும் ரயில்வே சாலையும் உள்ளது.வாழ்வதற்கான அடிப் படை தேவைகளான சமத் துவம், சுதந்திரம், ஜனநாய கம் அருந்ததியர் காலனியை தீண்டாமல் கிடக்கிறதென் பதும் உடன் நடவடிக்கை தேவை என்பதும் ஓசூர் சாராட்சியருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவ ருக்கும், நக ராட்சி தலைவர் மற்றும் ஆணையர், வட்டாட் சியர் ஆகியோருக்கு தெரியாமல் இருக்குமா..? என்பதே மக் களின் சந்தேகம். இது குறித்த நேரடி செய்தி தொ குப்பு:-இங்கே குடியிருக்கும் முத்தம்மா சொல்கிறார், என் கணவர் ராமு செருப்பு தைக்கும் வேலை செய்றாரு. ரெண்டு பிள்ளைங்க. அரசு பள்ளிக்கூடத்துல பையன் நாலாவது, பொண்ணு ரெண்டாவது படிக்கிறாங்க. மாமியாரு எங்களோட தான் இருக்குது. 2 சதுர வீடு கட்டியும் கட்டாம, பூசியும் பூசாம சுவத்துமேல சீட்ட கவுத்து, சீட்டுக்கு மேல கல்ல தூக்கி வச்சிருக்கோம். பாத்ரூம், குளிக்க கூட அறை கட்டல, இது மாதிரி ஏழெட்டு வீடுங்க அரையும் குறையுமா நிக்கும். ஏன்னா.. அரசாங்கம் இடம் கொடுத்தபோது காந்தி நகர் சாலை எங்க காலனிக்கு உள்ளே வரைக்கும் இருந் தது.
நாங்க வீடுங்க கட்ட ஆரம்பிச்சதும் காந்திநகர் கடைசியில எங்களுக்கு சாலை இல்லாம மறிச்சு ரெண்டு சுவர்கள் கட்டிட் டாங்க. அதனால இப்போ லாரி, டெம்போ நகருக் குள்ள வர வழி இல்லை பாருங்க.. என அந்த (தீண் டாமைச்) சுவரைக் காட் டினார்.70 வயது நாகம்மாவை சந்தித்தோம். நான் என் மக வீட்டுலதான் இருக்கேன். வீட்டுல கழிப்பறை கட்டல. ஏன்னா.. வீதிக்கு கால்வாய் இல்ல, தண்ணீர் வசதி இல்ல, அவசரத்துக்குக்கூட ரயில் சாலைக்குத்தான் போக ணும், ஒன்னுக்கு ரெண் டுக்கு போக மறைப்பான இடம் கூட இல்ல. ராத்திரி யிலே அவசரம்னா எங்க பாடு ரொம்ப திண்டாட் டம் தான். தெருவெளக்கு இல்ல, வீட்டுக்கும் கரண்டு இல்ல. பகல் நேரத்திலேயே சில சமயம் பெரிய பெரிய பாம்புங்க வீட்டுக்கு வந்தி ருது என்றார். சோபா ரிப்பேர், இருசக் கர வாகன சீட் கவர் போடும் தொழில் செய்துவரும் 60 வயது ராமச்சந்திரன் கூறும் போது,“இடம் கொடுத்து 4 வரு சம் முடியப்போகுது. சுமார் 20 வீடுகள் சின்னச் சின்னதா கட்டி இருக்கு. ஏழெட்டு வீடுகள் கட்டியும் கட்டாம கெடக்குது. அதுலேயே தான் குடித்தனமும் நடக் குது. சுமாரா 25 குடும்பங் கள்ல 125 பேருக்கு மேலே இங்கே பொழப்பு நடத்த றோம்.
கடலுக்கு நடுவுல மிதக்கிற தீவு மாதிரி அருந்ததியர் காலனி மக்கள் சாலையே இல்லாம தத் தளிக்கிறோம். சில வீடுகள் அடித்தளத் தோட இருக்குது.இடம் கொடுத்தபோது காந்திநகர் சாலைதான் உங்களுக்கு என வரைபடத்தோட காட் டினாங்க. ரெண்டு வருசத் துக்கு முன்னால திடீர்னு எங்க காலனிய மறிச்சு சாலை குறுக்க ரெண்டு (தீண் டாமைச்) சுவர் கட்டிட் டாங்க. இருந்த காசோட வட்டிக்கு கடன வாங்கி கட்ட ஆரம்பிச்சு இப்ப சாலையே இல்லாததால வீட்ட முடிக்கவும் முடி யாம , வட்டியும் கடனும் கட்டவும் முடியாம முழிச் சிக்கிட்டு இருக்கோம்” என் றார்.அன்புவின் மனைவி லட் சுமி, “அந்த காலனியின் கிழக்கு மூலையில் இருந்த ஒரு பாழடைந்த கழிப்பிட வளாகத்தை காட்டினார். எங்களுக்கு இடம் குடுக் கறதுக்கு முன்பே இந்த கழிப் பிட வளாகம் இருக்கு. 8 கழிப்பறைக்கும் கதவுகள் இல்ல. தண்ணீர் இல்ல, குப் பையும் துர்நாற்றமும் இருக்கு. இத சரி செய்து கொடுத்தா புண்ணியமா போகும்!” என்றபடி காந்திநகர் தண் ணீர் தொட்டியைக் காட் டினார்.
கீறல்விட்டு, பாசி படிந்து, ஈரக் கசிவுடன், மேல்மூடி இல்லாமல் அட் டையும் சாக்கும் போட்டு மூடி, பாதி திறந்த நிலையில், அரச மர இலைகள், பழங் கள், காக்கை, குருவி எச்சங் கள், பூச்சிகள், தண்ணீரில் மிதக்கிறது. இதுதான் குடி நீர் இந்த காலனிக்கு.மாதுவை சந்திக்கையில், இந்த காலனிக்கு எடத்த தவிர, குடிநீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி வீடு களுக்கும், காலனிக்கு மின் விளக்குகள், மின்சார வசதி, கழிப்பிட வசதி எதுவும் அர சாங்கம் செஞ்சு தரல… தீண் டாமை ஒழிப்பு முன்னணி மூலம் பலமுறை போராட் டம் நடத்தி, உதவி ஆணை யர், வட்டாட்சியரிடம் சாலையை மறிச்சு (தீண்டா மைச்)சுவர் கட்டியபோது மனு கொடுத்தோம் எங்கள போலவே நாங்க கொடுத்த மனுக்களும் அதிகாரிக ளால தீண்டப்படாமலே கிடக்கிறது என்று ஏக்கப் பெருமூச்சுடன் கூறினார். . ஓசூர் அருந்ததியர் காலனி மக்கள் குறைகள் இனி யாவது தீர்க்கப்படுமா?

Leave a Reply

You must be logged in to post a comment.